பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/574

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

492 வாரானைப் பருவம் சேக்கிழாரது திருவடிகளாகிய தாமரைகள் அடியார் களின் மதிக்கும் அனந்தக் கண்ணிராம் பனிக்கும் உவகை செய்வன என்று கூறிய நயத்தைக் காண்க. இதல்ை இயற் கைத் தாமரைக்கும் சேக்கிழாரது திருவடித் தாமரைக்கும் வேற்றுமை காட்டி வேற்றுமை அணி அமையப் பாடிய நயத் தையும் காண்க. மேலும், ஈண்டு இயற்கைத் தாமரைக்கும். பாதத் தாமரைக்கும் இயைபு காட்டப்பட்டுள்ளது, செம்மை, செந்நிறம் என்ற பொருளையும், நேர்மை என்ற பொருளையும், மணம் என்பது நறுமணம், நல்ல நிலை என்ற பொருளையும் அளி என்பது வண்டு என்ற பொருளையும், காத்தல் என்ற பொருளையும் தரும் பொருளில் ஈண்டு அமைக்கப் பட்டன. திருவடித் தாமரை நேர்மையும், நன் னிலையும், காத்தலையும் கொண்டு விளங்குகிறது. இயற்கைத் தாமரை, செந்நிறத்தையும், நறுமணத்தையும், வண்டுகளை யும் கொண்டு திகழ்கிறது. ஆகவே, சிலேடை அணியும் இதில் உண்டு. தாதியர் சேக்கிழாராம் குழந்தையினைப் புன்னகை புரியு மாறு வேண்டுகின்றனர். அங்ஙனம் வேண்டுகையில், தங் கட்கு இன்பம் தோன்றவும், பிற சமயத்தவர்க்குத் துன்பம் தோன்றவும் சிரித்துக்கொண்டு நடந்துவர வேண்டுகின் றனர். சமயாசாரியர்கள் செயல்கள் இங்ஙனம் அகச் சமயத் தார்க்கு அகக்களிப்பையும், புறச்சமயத்தார்க்குத் துணுக்கத் தையும் தருதல் மரபு. இதனைச் சேக்கிழாரே திருஞான சம்பந்தப்பெருமாளுர் குழந்தைப் பருவத்தைப்பற்றிப் பாடு கையில், விதிதவறு படும்வேற்றுச் சமயங்கள் இடைவிழுந்து கதிதவழ இருவிசும்பு நிறைந்தகடி வார்கங்கை நதி தவழும் சடைமுடியார் ஞானம் அளித் திடவுரியார் மதிதவழ்மா ளிகைமுன்றில் மருங்குதவழ்ந் தருளினர் என்று பாடினர். சேவையர் குலம் உலகு புகழையே போர்வையாகக் கொண்டது.