பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/575

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாரானப் பருவம் 493 ஆழித்தேவர் கடலானர் அல்லாத்தேவர் அம்பலத்தார் ஊழித்தேவர் தாம்கூடி உலகம்காக்க வல்லாரோ வாழித்தேவர் திருமக்கள் வையம்புரக்கும் பெருக்காளர் மேழித்தேவர் பெருமைக்கு வேறும்தேவர் கூறேனே தொழுங்குலத்தில் பிறந்தால்என் சுடர்முடி மன்னர் ஆகி எழுங்குலத்தில் பிறந்தால்என் இவர்க்குப்பின் வணிகரெனும் செழுங்குலத்தில் பிறந்தால்என் சிறப்புடைய ராணுல்என் உழுங்குலத்தில் பிறந்தாரே உலகுய்யப் பிறந்தாரே அழுங்குழவிக் கன்புடைய தாய்போல் அனைத்துயிர்க்கும் எழுங்கருணைப் பெருக்காளர் எளியரோ யாம்புகழ உழுங்கொழுவில் கருவீறி உலகமுதல் கருவாகச் செழுங்கமலத் தயன் இவரைச் செய்துலகம் செய்வானேல் வேதியர்தம் உயர்குலமும் விறல்வேந்தர் பெருங்குலமும் நீதிவளம் படைத்துடைய நிதிவணிகர் தம்குலமும் சாதிவளம் படைத்துடைய தாயனைய காராளர் கோதில்குலம் தனக்குநிகர் உண்டாகில் கூறிரே என்று ஏர் எழுபது பாடல்களால் வேளாளர், புகழே போர்வையாக உடையவர் என்பது புலனுகும். சேவையர் காவலராம் சேக்கிழார் மறுசமயத்தவர் உட்குவரப் பாடவல்லவர் என்பது, அவம்பெருக்கும் புல்லறிவின் சமண்முதலாம் பரசமயம் பவம்பெருக்கும் புரைநெறிகள் பாழ்படநல்லுாழிதொறும் தவம்பெருக்கும் சண்பையிலே தாவில்சரா சரங்கள் எலாம் சிவம்பெருக்கும் பிள்ளையார் திருவவதாரம் செய்தார் என்றும்,