பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/587

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாரrனைப் பருவம் 505 யானைத் தந்தம், நெற்கதிர், வாழை முதலான இடங்களில் உண்டாதலே, தந்தி வராகம் மருப்பு:இப்பி பூகம் தனிக்கதலி நந்து சலஞ்சலம் மீன்தலை கொக்கு நளினம்மின்னர் கந்தரம் சாலி கழைக்கன்னல் ஆவின்பல் கட்செவிகார் இந்து உடும்பு கராம்முத்தம் ஈனும் இருபதுமே என்ற பாடலால் அறியலாம். இங்ங்னம் எல்லாம் பிறக்கும் முத்துக்கும் விலையுண்டு. ஆஞல், முருகன் தரும் முத்திற்கு விலை கூற இயலாது என் பதைப் பகழிக்கூத்தர், கத்தும் தரங்கம் எடுத்தெறியக் கடுஞ்சூல் உளைந்து வலம்புரிகள் கரையில் தவழ்ந்து வாலுகத்தில் கான்ற மணிக்கு விலையுண்டு தத்தும் கரட விகடதட அந்திப் பிறைக்கூன் மருப்பில்விளே தரளம் தனக்கு விலையுண்டு தழைத்துக் கழுத்து வளைந்தமணிக் கொத்தும் சுமந்த பசுஞ்சாலிக் குளிர்முத் தினுக்கு விலையுண்டு கொண்டல் தருநித் திலம்தனக்குக் கூறும் தரம்உண்டு உன்கணிவாய் முத்தம் தனக்கு விலையில்லை முருகா முத்தம் தருகவே முத்தம் சொரியும் கடலலைவாய் முதல்வா முத்தம் தருகவே என்று பாடி மகிழ்ந்தார். இக்கருத்தையே குமரகுருபர சுவாமிகளும் தம் மீட்ைசி அம்மன் பிள்ளைத் தமிழில், கொழு திமேதர்வண் டுழக்குகுழல் கோதைக் குடைந்த கொண்டலும் நின் குதலைக் கிளிமென் மொழிக் குடைந்த குறுங்கண் கரும்பும் கூன் பிறைக்கோ