பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/590

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

508 வாரானப் பருவம் (அ. செ. மயாமலம்-மும்மலங்களில் ஒன்று, கரும மலம்-இதுவும் மும்மலங்களில் ஒன்று, ஏதுவாம்மலம்-எல்லா வற்றிற்கும் காரணமாகிய ஆணவமலம், தன்சத்தி-ஆன வத்தின் வன்மை, திருவருள்-சிவசக்தி, பதிய-நிபாதமாக, அதாவது சத்தினிபாத நிலை அமைய ஆயாத-ஆராயாத எம் மனம்-எம்முடைய சிறுபுத்தி, அடைந்த-விசேடணமாக கொண்ட, அடியர்-தாசமார்க்கம் சார்ந்த அடியவர், அவிர்விளங்கும், புதல்வர் - சத்புத்ரமார்க்கத்தர், தோழர்-சக மார்க்கத்தவர், தாங்கள் அடைந்த மார்க்கம்-சன்மார்க்கம், பொலிய-விளங்க, அராவுரி-பாம்புத் தோல், நீத்த-நீக்கிய மலர்-மல்லிகை முல்லை போல்வன இக்கடை-இவ்விடத்தில்; கடை-இடம், வாசல் தூசு-ஆடை, கால்-காம்பு கொண்டல்மேகம் போன்ற நிறமுடைய திருமால், மிகை-வீண். காசினி-பூமி, கூய்-கூப்பிட்டு, சேவையார்-வேளாளர். விளக்கம்: இப்பாடலில் சேக்கிழார் திருவடிச் சிறப்பும், அவர் உலகைக் காக்கும் பண்பும் கூறப்பட்டுள்ளன. உயர்களைப் பந்தித்து நிற்பவை ஆணவம் கன்மம் Ls) fȚ* @ð) # ! என்பனவாகும். பசுவாகிய உயிர்கள் பாச பந்தங்களினல் கட்டுப்பட்டிருக்கும் காரணங்களாலேயே பசு என்னும் பெயரைப் பெற்றது. அவற்றுள் மாயாமல மாவது இப்பிரபஞ்சமாகிய காரியப் பொருளுக்கு ஆதி காரணமாகியும், உயரின் அணு தியாகவே பற்றிதிற்கும் ஆணவத்தோடும் சேர்ந்து அதனைப் பக்குவப்படுத்துவதாகி யும், எதையும் நினைக்கவிடாமல் எல்லா உலகங்களையும் மயக்கித் தொழில் படுத்தும் தன்மையது. இம்மலம் அஞ் ஞானத்தை உண்டுபண்ணும், பொய்கூறச்செய்யும், மேலும் காமவசம் ஆக்கல், மயங்குதல், பொருமைப்படுதல், பயப் படுதல், ஆசையுண்டாதல் ஆகிய செயல்களுக்கும் காரண மானது. - மாயா மலத்தின் தன்மையைச் சித்தியார், நித்தமாய் அருவாய் ஏக நிலையதாய் உலகத் திற்கோர் வித்துமாய் அசித்தாய் எங்கும் வியாபியாய் விமல ಸ್ತ್ರ 、芬sf了