பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/594

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

512 வாரானப் பருவம் சிவஞான சித்தியாரும் மலநீக்கும் மார்க்கத்தினை, பிணத்தினை ஒத்து வாழ்வோர் பின் நடைப் பிணங்கள் போல உனக்கியே உழல்வீர் உங்கள் உடல்உயிர் உணர்வும் எல்லாம் கணத்திடைத் தோன்றி மாயும் காயம் என்றறிந் தொருக்கால் வணக்குறிர் அரனே என்றும் வானவர் வணங்க வைப்பன் அருளே சத்தி என்பதைச் சிவஞான சித்தியார் நன்கு தெளிவுற, அருளது சத்தி ஆகும் அரன் தனக் கருளே இன்றித் தெருள்சிவம் இல்லை.அந்தச் சிவம் இன்றிச் சத்தி இல்லை மருளினே அருளால் வாட்டி மன்னுயிர்க் களிப்பன் கண்கட் கிருளினை ஒளியால் ஒட்டும் இரவியைப் போல ஈசன் என்கிறது, இறைவனது திருவருளைப் பல வகைகளில் பெறலாம்' அப்பலவகைகளில் தாசமார்க்கமும், சத்புத்திர மார்க்கமும். சகமார்க்கமும், சன்மார்க்கமும் ஆகும். இந்நால்வகை மார்க் கங்களே விளக்கியவர்களே ஆளுடைய அரசர், ஆளுடைய பிள்ளையார், ஆளுடைய நம்பிகள், ஆளுடைய அடிகள் என்பவர்கள். அப்பர் தாதமார்க்கமாம் தொண்டு மார்க்கத்தைக் காட்டியவர் என்பது 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்று அருளியதனுலும் 'நிலைபெருமாறு எண்ணுதியேல்” என்ற தாண்டகத்தில் தொண்டு செய்ய வேண்டும் என்பதைத் தம்நெஞ்சிற்கு உபதேசம் செய்திருப் பதாலும் தெளியலாம். திருஞான சம்பந்தர் சத்புத்திர மார்க்கத்தை விளக்க வந்தவர் என்பது அவர் அம்மை அப்பரிடம் அமுது பெற்றுச் சைவப் பயிரை வளர்த்துச் சிவனடி உற்றதை அவர் பாடல்