பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/610

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

528 வாரrனைப் பருவம் (அ. சொ.) வில் - ஒளி, வில் +தங்கிய, விளர்ப்புற்று. வெண்ணிறமுற்று, இயங்கி-நடந்து, பரசமய வெய்ய கோடை-பிறமதங்களாகிய வெம்மைமிக்க கேர்டை, சிற்றம் பல நாயகர்-தில்லையில் உள்ள சிற்றம்பலத்தில் நடனம் புரியும் தலைவர் நடராசப் பெருமாளுர், கருணைத்திரை. கருணையாகிய அலை, வாரிதி-கடல், தப-கெட, அமையார். கற்றபடி அமையாதவர், மலத்துன்பம்-மும்மலங்களால் வரக்கூடிய துன்பம், அரமாமுழக்கு:அர, அர என்று கூறும் சிறந்த ஒலி, காமர்-அழகு, கருதா நின்ற கருதப்பட்ட, கொற்றம்-வெற்றி, பொலியும்-விளங்கும். விளக்கம்: நீற்றிற்கு ஒளியுண்டு ஆதலின் 'வில் தங்கிய விபூதி' என்றனர். சேக்கிழாரும் நீற்றின் ஒளிக்கு சந்திரனைக் கூறி இருப்பதையும் நாம் அறிதல் வேண்டும். 'அண்ணல் வெண்ணிற்றின் ஒளி போன்றது நீள் நிலா" என்ற தொடரைக் காணவும். வேறு வேரும் பரசமயம் என்பன உலகாயதன், செளத்திராந்திகன், யோகாசாரன், மாத்தியமிகன், வைபாடிகன், நிகண்டவாதி, ஆசீவகன், பட்டாசாரியன், பிரபாகரன், சத்தப்பிரம்பவாதி, மாயா வாதி, பாற்கரியன், நிரீச்சுரசாங்கியன், பாஞ்சராத்திரிகள், மேற்கொண்டவை. இம்மதங்கள் வெம்மை செய்து நன்மை செய்யாத காரணத்தால் கோடையாக உவமித்தனர் ஆசிரியர், மேலே கூறப்பட்ட சமயங்கள் நன்மையாகாதவை என்பதைச் சிவஞான சித்தியாரில் பரபக்கப் பகுதியில் தனித்தனியே அவற்றின் கொள்கை இன்ன என எடுத்துக் கூறி அவை பொருந்தாதவை என்பதைத் தக்க ஏதுவினைக் காட்டிக் கண்டித்துச் சத்காரியவாதமாகிய சைவ சித்தாந் தத்தை நிலைநாட்டி இருப்பதைக் காண்க. என்ருலும் பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம்போல இரண்டு மதங்கவின் கொள்கைகளை ஈண்டு உணர்வோமாக. மாயா வாதியின் மதத்தின் கொள்கைகள் பல. இருந் தாலும், அவர்கள் முக்கியமாக உணர்த்துவது இதுதான் என்பதைச் சிவஞான சித்தியார்,