பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/622

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

540 வrரானைப் பருவம் ஆகவே, அவர்களைச் சேக்கிழார் எள்ளும் திறத்தினர் என்பதில்குற்றம் இல்லை. இவர்களை 'இருள்போல வந்து தந்தொழில் புரிந்தனர் வஞ்சனே மனத்தோர்' என்றும், 'கருமுரட்டு அமண்கையர்” என்றும், 'மால்பெருக்கும் சமண் கையர்” என்றும், 'புல்லறிவில் சாக்கியர்கள்' என்றும், அஞ்சாது உண்மையைக் கூறியதால் சேக்கிழாரை “பரசமய ஏறு' என்றனர். தேன் நாவளவில்தான் இனிக்கும். உணர்வில் இனிக்கும் தன்மையது அன்று. ஆளுல், சேக்கிழாராம் தேன் உணர் வில் சென்று இனித்தலின், உணர்வின்கணும் மதுரித்து இனிக்கும் தேன் என்று உம்மை கொடுத்து உரைத்துள்ளளர். மணிமொழியார் 'கோல்தேன் எனக்கென்கோ' என்று திருவாசகத்திலும், காலனே ஒலமிட அடர்த்தகோல்தேன்' என்று திருக்கோவையாரிலும் கூறியதையும் காண்க. தெள்ளும் புலத்தார் என்பார்க்கு விளக்கம், பலவாருகக் கூறலாம். இவர்களைப் பகுத்தறிவாளர் என்றும் சீர்திருத்தக் காரர் என்றும் கூறலாம். பகுத்தறிவாளர்கள் தம் சீர் திருத்தக் கருத்துக் கேற்ற பொருள்கள் உண்டா என்று பெரிய புராணத்துள் காண நுழைந்தால், அவர்கள் விரும்பும் விருப்பப்படி அத்தகைய கருத்துக்களையும் சேக்கிழார் கூறி இருத்தலின், 'தெள்ளும் புலத்தார் பெறுகாம தேனு' என்றுசிறப்பிக்கப்பட்டனர். இதனைச் சுந்தரர் வேசியர் குலத்தும் மாதராம் பரவையாரையும், வேளாள குலத்துச் சங்கிலியாரையும் மணந்து கொண்டதைச் சேக்கிழார், "திருநாவலூரன் மகிழத் தாம்க்குழலாள் பரவைவதுவை தகுநீர்மையினல் நிகழச் செய்தார்' என்றும், பண்டு நிகழ் பான்மையினல் பசுபதிதன் அருளாலே, வண்டமர்பூங் குழ லாரை மணம் புணர்ந்த வன்ருெண்டர் என்றும் பாடிக் காட்டி இருப்பதால் அறிக. சுந்தரர் வேதியர் என்பதை மாதொரு பாகனர்க்கு வழி வழி அடிமை செய்யும் வேதியர் குலத்தில் தோன்றி' என்றும், பரவையார் பரத்தையர் குலத்தவர் ஆதலே,