பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/631

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்புலிப் பருவம் 549 சந்திரனே உவப்பதும் மரபாயிற்று. பதியிைரம் வண்டுகள் என்றது. பல வண்டுகள் என்பதாம். இவ்வாறு மிகுதிப் படுத்திக் கூறுதல் புலவர் மரபு. வில்லிபுத்துாராரும், விதுரர் வாயில், 'அறுநூருயிரம் மடையர் (சமையல்காரர்) தம்மை நோக்கினர் அவர்களும் விரைவுடன் சமைத்தார்' என்று பாடியுள்ளனர். மலர்கள் மலர்ந்தால் வண்டுகள் சூழ்ந்து ஒலிப்பதை 'பண்பாட' என்றனர். 'வண்டுதமிழ்ப் பாட் டிசைக்கும் தாமரையே' என்றனர் கம்பர். சந்திரன் சிவ பெருமானது சடையில் கூடியிருக்கிருன். இதல்ை இறைவன் சந்திரசேகரன் என்ற பெயரையும் பெற்றுளான் அல்லனே? இறைவன் பிறைசூடிய சிறப்பை நமது திருமுறைகள் பல படி எடுத்து இயம்புகின்றன. இறைவன் சீரொளிய தழல் பிழம்பாய்நின்ற வன். அரும்பெருஞ் சோதி ஆதலின், "நீடு சுடர்படு சம்பு' என்றனர். சம்பு என்னும் பெயர் இறைவனுக்கு இருப்பதன் காரணம், அவன் இன்புருவன் ஆதலினல் என்க. அவன் இன்புறுவினன் என்பதை மணிமொழியார், தினத்தனை உள்ளதோர் பூவினில்தேன் உண்ணுதே நினைத்தொறும் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும் அனைத்தெலும் புள்நெக ஆனந்தத் தேன் சொரியும் குனிப்புடை யானுக்கே சென்றுரதாய் கோத்தும்பீ என்றும், 'சட்டோ நினைக்க மனத்தமுதாம் சங்கரன்' என்றும் அறிவித்துள்ளதை அறிவோமாக. சந்திரன் பதினறு கலைகளுடன் திகழ்பவன்; திருப்பாற் கடலில் தோன்றிய சிறப்பும் சந்திரனுக்கு உண்டு. சந்திரன் குளிர்ந்த ஒளியுடையவன். சந்திரனது குளிர்ந்த ஒளியைக்