பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/632

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

550 அம்புலிப் பருவம் கண்ட போது கடல் பொங்கும். இதனைச் சிவப்பிரகாச சுவாமிகள் "தண் கதிரால் பொங்கும் கடல்' என்றனர். வில்லிபுத்துாராரும் 'இந்துவின் கதிர் கண்டு மேல் மேல் உற்று இரங்கி, வான் கரை கடந்தேறும் சிந்து வெண்திரைச் சிந்து' என்றனர். இக்கருத்துக்களை உள் அடக்கியே 'பரவை அலறத் தோன்றலாய்' எனப்பட்டது. அவன் சே(ரிடப) ராசிக்கு உரியவன். அதாவது சந்திரன் இடப ராசியில் உச்சம் உடையோன் என்பது சோதிட நூல் கருத்து. அவன் அழகிய வளத்தைக் கொண்டவன். அவன் அழகுடையவன் என்பதை அவனே மாதர்களின் முகத்திற்குப் புலவர்கள் ஒப்புக் கூறுதலால் அறியலாம். சேக்கிழார் பெருமானும் பெருமைமிக்க அறிவுடையவர். இவர், 'கொழுநன் தொழுதெழுவார் பெய்யெனப் பெய்யும் மழை' என்ற குறட்பாவை எத்துணை நுட்ப அறிவால் 'மழைக்குதவும் பெருங்கற்பு’ என்ற தொடரில் குறிப்பிட் டுளர்? ஆகவே, இவர் மதி, பாடு, மதி ஆயிற் று. சேக்கிழார் வேளாளர். வேளாளர்கட்குரிய மாலை கழுநீர் மலர்மாலே. ஆகவே, கழுநீர்மாலே உவந்திடலால் எ ன் ற ன ர். "செங்குவளை மாலை அணி திண்டோள் வலத்தனே' என்று முன்பும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறே வேதியர்கட்கும் மாலேயுண்டு. அவர்கள் மாலை தாமரை. இதனைச் சுத்தரர் செம்மையுற, 'அல்லியம் தாமரைத்தார் ஆரூரன்' என்று தம் மரபு மாலையைக் குறிப்பிட்டுள்ளனர். வணிகர்கட்கு முல்லைத்தார் உரியது. அமர் நீதியார் வணிகர். அவரைப் பற்றிச் சுந்தரர் குறிப்பிடுகையில் 'அல்லி மென் முல்லையம் தார் அமர் நீதிக்கடியேன்” என்றது காண்க. சேக்கிழார் பல்கலைக் குரிசில். இதனை அவர் இயற்றிய நூலில் பரக்கக் காணலாம். 'நண்ணிய பாணியும் இயலும் து.ாக்கு நடை முதல் கதியில் பண் அமைய எழும் ஓசை எம் மருங்கும் பரப்பினரே என்றது இசைக்கலையினையும், 'எரிவிடம் முறையே ஏறித் தலைக்கொண்ட ஏழாம் வேகம் தெரிவுற” என்று மருத்துவக் கலையினையும் (மூர்ச்சை, கண்