பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/635

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்புலிப் பருவம் 553 இருக்கிருய், அடங்க-எல்லாவற்ருேடும், அளவ்ா-கலந்து, வியன்-பரந்தஒளியுடைய, சாலி-நட்சத்திரங்கள், பொலியவிளங்க, ஒர்-ஒப்பற்ற, அறவர்-துறவறம்பூண்ட அத்திரிமா முனிவர். இவர் சந்திரன் பிதா என்பது புராண மரபு, பரமன்-மேலான இறைவனும் சிவன், சடாடவி-சடைக் காட்டில், சடை அடவி, வரநதி-சிறந்த நதியாகிய கங்கை, முளே-தோன்றுகின்ற, நந்து-பாஞ்சசன்யமாகிய சங்கு, கரம்கையுடைய, பண்ணவன்-தேவனகிய திருமால், நிகராது இராய்-ஒவ்வாமல் இருக்கமாட்டாய், பாவலர்-பாட்டில் வல்ல புலவர், நேயம்-பண்பு. விளக்கம்: இப்பாடலும் சேக்கிழாருக்கும் ஒப்புவமை காட்டி நிற்கிறது. சந்திரன் தோன்றத் தாமரைகள் குவிந்து விடும். அத்தகைய ஒளிக்கதிர்களைப் பெற்றவன் சந்திரன். சாலி என்பதும் அருந்ததி நட்சத்திரம் என்ருலும், ஈண்டுப் பொதுவாக நட்சத்திரங்களைச் சுட்டி அமைந்துள்ளது. ஆகவே, நட்சத்திரங்களுடன் பொலிபவன் ஆயினன். சந்திரன் அத்திரிமாமுனிவர் விழியின்நின்று வந்தவன் என்பது புராணம். இறைவன் சடாமுடியில் இருக்கும் கங்கையுடன் சந்திரனுக்கும் இருக்கும் ச ம் ப ந் த ம் உடையவன். அந்த நெருக்கத்தை 'சந்திரனை மாகங்கை மோடி’ என்று தேவாரம் உணர்த்தும் ஆற்ருல் உணரலாம். சந்திரன் அத்திரி முனிவர் விழியில் தோன்றிய வரலாறு பின் வருவது: அத்திரி முனிவர் ஒர் உபப்பிரமர். இவர் இந்திரிய நிக்கிரகம் செய்து, மூவாயிர வருடம் தவம் புரிந்தார். அது போது அவருடைய கண்களில் இருந்து பேரொளி தோன்றிப் பத்துத் திசைகளிலும் ஒளி வீசிக்கொண்டு அக் கண்கள் நீரையும் பெருக்கிக் கொண்டிருந்தன. அந்தக் கருப்பத்தைத் திக்குத் தேவியர் பதின்மரும் தாங்கத் தொடங்கினர். ஆனல், அவர்களால் பெர்றுக்க முடியவில்லை. சந்திர வடிவான அந்தக் கருப்பத்துடன் பூமியில் வீழ்ந்தனர். பிரமன் அந்தச் சந்திரன வேதமயமான தேரில் ஏற்றிக்