பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/638

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

556 அம்புலிப் பருவம் விளக்கம்; சந்திரன் இரவில் தோன்றுபவன்; யாசிப் பவனும் ஆவான். ஆதலின் இரவோன் எனப்படுபவன். சேக்கிழார் இல்லை என்னுத வேளாளர்தம் பெருங்குலத்தில் உதித்தவர். என்றும் காப்பவன் வேளாளன். ஆகவே பிரபு எனப்பட்டனர். இதுமட்டும் அன்று. அனபாயன் கவரிவீசப் பெறும் மாண்பும் மன்னர் போல யானைமீது இவர்ந்து வந்த சிறப்பும், சிவ காணங்களாகத் தோன்றும் தில்லை மூவாயிரவர் இவரது பவ்னி பின் சென்ற பெருமையும் கூத்தப்பெருமான் கொடுத்த முதலைப்பெற்ற மூதறிஞரும்: மேலும் மடாதிபதிகள், புலவர்கள். நாவீறு படைத் தவர்கள் கைஎடுத்து வணங்கி ஏவல்வழி நிற்கப்பெறும் பேறுடையரும் ஆதலாலும் பிரபு எனப்பட்டனர் எண்க. கள்வன் என் பான் திருடன். அவன் இரவில்தான் வெளி வருவான். அவன் சந்திரன் வருகையினை உவக்கின்றனன். அவன் வர இவன் துணையாதலின், உவப்பவன் என்றனர். அதனோடு கள் வ னு ம் நண்டு ராசியிலும் சந்திரன் சஞ்சரிப்பவன். சேக்கிழார் கள்வர்களை வெறுப்பவர். சேக்கிழார்க்குக் கள்வர்களாகச் சமண பெளத்தர்களைக் கொள்ளலாம். அவர்களே இவர் வெறுத்ததை இவர் நூலில் காணலாம். சேக்கிழார் உரவோர் ஆவர். நண்டு முதலிய புலாலே வெறுப்பவர். உரம் ஈண்டு உண்மை ஞான மாகும். இச்சொல்லுக்கு ஞானம் மட்டும் அன்றி ஊக்கம், திண்மை, வெற்றி, உண்மை, பாதுகாப்பு, சிறப்பு முதலிய பொருள்களும் உண்டு. இவரது ஞான அறிவிற்குப் பல எடுத்துக் காட்டுக்கள் உண்டு. திருவள்ளுவர் இல்லறத்தானுக்குரிய பண்புகள் பல வற்றில், தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான் ஐம்புலத்தா ருேம்பல் தலே. (என்ருங்கு என்றனர். இக்குறட்பாவின் கருத்தை அப்படியே சேக் கிழார் தமது நூலில்,