பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/644

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. சாறுசால் விதித் திருத்தில்லை அம்பலம் தன்னில்எஞ் ஞான்றும்நின்று தாண்ட்வம் நவிற்றிஉல உய்யச் செயும்பரம சற்குரவன் இனிதுசெய்யும் பேறுமே வியஅணுக் கிரகம்முழு தும்பெற்ற பெரியோன் இவற்குவானுேர் பேணுகுர வன்பாங்கர் நிக்கிரக மேபெற்ற பேதை நீ மாற்றுயர்ந்து வீறுசெம் பொன்னுே டிரும்பொத்த போதினும் மேஒப் புருமைமண்ணும் விண்ணும்.உண ரும்கருணை நினைஅழைத் தகதிந்த விதம்ஒர்ந்து கொடியோடும்வான் ஆறுநோய் சூளிகைக் குன்றைநகர் ஆளியுடன் அம்புல் ஆட்வாவே அருளுருத் தேசுபொலி அருள்மொழித் தேவனுடின் அம்புல் ஆட்வாவே | அ. சொ. சாறு-திருவிழாக்கள், சால்-மிகுந்த, திருசிறந்த, தில்லை-சிதம்பரத்தில் உள்ள, அம்பலம்-பொற் சபை, எஞ்ஞான்றும் எக்காலத்தும், தாண்டவம்-நடனம், நவிற்றி-செய்து, உய்ய-பிழைக்க, பரமசற்குரவன்-மேலான ஞானசாரியனுகிய இறைவன். வானேர்-தேவர், பேணுபோற்றும், குரவன் பாங்கர்-பெரியோனகிய பிரகஸ்பதி பிடத்தில், அநுக்கிரகம்-அருளிப்பாடு, நிக்கிரகம்-சாபம், கோபத்தால் தள்ளப்படுதல். வீறு-சிறந்த, மண்ணும்இம்மண்ணுலகமும், விண்ணும் - மேலுலகமும், ஒர்ந்துஆராய்ந்து அறிந்து, இந்த விதம்-இந்த விடயத்தை, வான் ஆறு-ஆகாயகங்கை, குளிகை-நிலாமுற்றம், அழைத்தஃது அழைத்தது. இச்சொல்லின் இடையில் ஆய்த எழுத்துத் தோன்றியது விரித்தல் விகாரம் ஆகும். விளக்கம்; இப்பாடலும் சேக்கிழாருக்கும் சந்திர னுக்கும் உள்ள வேற்றுமையினை உணர்த்துகிறது. தில்லைக்