பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/647

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்புலிப் பருவம் 565 இவ்வுண்மைகளை நம் முன்னேர்கள் நன்கு உணர்ந்திருந் தனர். உமாபதியார் இவை அனைத்தையும் உள்ளடக்கி 'வாராரும் கடல்புடை சூழ் வையமெலாம் ஈடேற ஏராரும் மணிமன்றுள் எடுத்த திருவடி போற்றி” என்றனர். இந்தக் கருத்துக்களைக் கொண்டுதான் திரு. பிள்ளே அவர்கள், 'எஞ்ஞன்றும் நின்று தாண்டவம் நவிற்றி உலகுய்யச் செய்யும் பரம சற்குரவன்' என்றனர். இறைவன் பரம சற்குரவனகித் தானே வந்து ஜீவான் மாக்களை நல்வழிப்படுத்தி அருளுதலே நமது சிந்தாந்த நூல்கள் நன்கு உணர்த்துகின்றன. ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தென தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே' என்று சிவஞானபோதமும், மன்னவன் தன் மகன்வேட ரிடத்தே தங்கி வளர்ந்துஅவனே அறியாது மயங்கி நிற்பப் பின்னவனும் என்மகன்.நீ என்றவரில் பிரித்துப் பெருமையொடும் தானுக்கிப் பேணு மாபோல் துன்னியஐம் புலவேடர் சுழலில் பட்டுத் துணைவனையும் அறியாது துயருறுதொல் உயிரை மன்னும்அருட் குருவாகி வந்தவரின் நீக்கி மலம்அகற்றித் தானுக்கி மலரடிக்கீழ் வைப்பன் என்று சிவஞான சித்தியாரும் கூறுவது கொண்டு இறைவன் சற்குருவாய் வந்து அருள் செய்வதைக் காண்க. இதற்கு எடுத்துக் காட்டாக மணிமொழியாரும் இறை வர் குருமூர்த்தமாகவந்து பேரருள் தமக்குப் புரிந்ததை, அருபரத் தொருவன் அவனியில் வந்து குருபர கிை அருளிய பெருமையும் என்றும், நானேயோ தவம்செய்தேன் சிவாயநம எனப்பெற்றேள் தேளுய்இன் அமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெருமான்