பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/657

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்புலிப் பருவம் 575 என்பது. ஆருவது பரவை, பரப்பு என்னும் பொருளதாய் அமைந்துள்ளது. பரவு + ஐ பரவு-பகுதி, ஐ தொழிற் பெயர் விகுதி. ஈற்றில் உள்ள ஏழாவது பரவை கடல் என்ற பொருளில் எந்தவித மாறுதலும் இன்றி அமைந்துள்ளது இப்பாட்டின் திரண்ட .ெ ப ா ரு ள் 'இவள் பேர் பரவை’ இவளது பெண்மை அழகு முதலிய காரணத்தால் தேவர் கட்கும் தாய் ஆவாள். இவளது விரும்பத்தக்க அல்குல் (பெண் குறி) பாம்புகட்குத் தலைவனை ஆதிசேடன் படம் போன்றது. இவளது அழகிய பற்கள் முல்லை அரும்புகள் போன்றவை. இவளது அழகு திருமகளும் புகழும் தன்மையது. இவளது திருவுருவின் மெல்லிய சாய லில் இடைப்பட்ட என் ஆசை ஏழுகடல் போன்றது' என்பதாம். பெரு உம்பர் அவை விரும்பு அல்குல்.ஆர் பரவு ஐ எனப்பிரித்துத் தேவ லோக சபையின்ர் விரும்பும் ரம்பை முதலிய மாதர் போற்றும் தலைவி என்றும் பொருள் கூறலாம். துாக்கு என்பது பாட்டு என்ற பொருளையும் தராசு என்ற பொருளையும் கொண்டது. இவ்விரு பொருளும் தரும் நிலையில் திரு பிள்ளை அவர்கள், 'சிறு தூக்கின் எழுபரவையும் புக முடித்துற நிறுத்தான்' என்றனர். அதாவது ஒரு பாட்டில் ஏழுமுறை பரவை எனும் சொல்லே (கடல்களையும்) நிறுத்தினன் என்பதும், தராசில் ஏழு கடல்களையும் புகுமாறு நிறுத்துக் காட்டினன் என்பதும் ஆகும் இச்செயல் வல்லபம் மிக்க செயல் அன்ருே? ஆகவே, வல்லபம் உணர்ந்திலைகொல் என்று சந்திரனே வினவினர். கடல் ஏழு ஆவன உப்பு, நன்னீர், பால், தயிர், நெய், கருப்பஞ்சாறு, தேன் என்பன. குன்றத்துாரின், முத்துப் பதித்த மாளிகைகள் மணித்திடர் ஆயது என்பது உயர்வு நவிற்சி அணி. இதுவும் பேது உபாயத்தால் சந்திரனே அழைத்த தாகும். (67)