பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/680

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

598 அம்புலிப் பருவம் நிறைந்தவர், அனேயர் - அத்தகையவர். கடைக்கணித்துகடைக்கண்பார்வை பார்த்து, மருவு-பொருந்திய, புனல் வளம்-நீர்வளம். விளக்கம்: முதல் இரண்டடிகள் சமணர்களைப்பற்றிய குறிப்புக்களை அறிவிக்கின்றனர் அவர்கள் தம் தலே மயிரைக் கத்தியால் மழுக்காமல், தம்கையால் பறித்துக்கொள்வர் அரையில் பஞ்சாடையோ பட்டாடையோ உடுத்தாமல், பாய் ஆடையினை உடுப்பர். இவர்களது இந்நிலைகளை, 'தடுக்கால் உடல் மறைப்பார். 'தலைஎலாம்பறிக்கும் சமண்' 'தலை பறிக்கச் சுகம் என்னும் குண்டர்' பறிதலைக்கையர் பாய் உடுப்பார்கள்' 'இளமயில் இறகுகள் தழையொடு செயல்மருவிய' "பீலியை இடுக்கிநாளும்' என்று திருமுறை இயம்பும் ஆற்றை அறியவும். உழலுதல் திரிதலாம், இச்சொல்லாட்சியினைத் திரு பிள்ளை அவர்கள் 'வேத வேள்வியியை நிந்தனை செய்துழல்” என்று ஆளுடைய பிள்ளையின் வாக்கினின்று பெற்ருர். சமணர்கள் சழக்கர்கள் என்று கூறக் காரணமுண்டு, அவர்கள் பிற உயிர்களைக் கொல்வதில்லை என்ற கொள்கை யர். சீவகாருண்யம் உடையவர்கள் என்று கூறிக் கொள்வர். அத்தகையவர்கள் மீன் பிடித்தனர் என்று திருஞான சம்பந்தர் கூறுவாராளுல், அவர்கள் பொய்யர்: குற்ற முடையவர்கள்; கீழ்மக்கள்தாமே! அவர்கள் மீன் பிடித்ததை 'கழிக்கரைப்படு மீன் கவர்வர்' 'அமண் கழி அருகு பள்ளி இடமாக அடுமீன்கள் கவர்வர்' என்று கூறியிருப்பதைக் காண்க. அவர்களது ஒழுக்கத்தினைக் கூறிக் கண்டித்துக் சம்பந்தர் 'பல்அறம் காட்டியே வரும்மாடெலாம் கவர் கையர்' என்றும் கூறியுள்ளனர். சம்பந்தர் திருமடத்துத் தீயிட்டதும் குற்றம் அன்ருே? இவர்களது சழக்கினைச் சேக்கிழார்,