பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/684

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

602 அம்புலிப் பருவம் மதத்தால் மிக்கான் மற்றிவன் மைந்தன் உயிர்வாங்கப் பதைத்தான் என்ன உன்னி வெகுண்டான் மதில்மூன்றும் சிதைத்தான் வாமச் சேவடி தன்னல் சிறிதுந்தி உதைத்தான் கூற்றன் விண்முகில் போல்மண் உறவீழ்ந்தான் என்று 'சிறிதுந்தி' என்ற தொடரில் காட்டியுள்ளனர். இக் கருத்தைக்கொண்டே ஈண்டும் பிள்ளே அவர்கள், "சற்றே” என்றனர், 'கறுப்பும் சிவப்பும் வெகுளி பொருள்' என்பது தொல்காப்பியம். ஆதலின் 'கறுக்கச் சிவத்தல்" என்ற தொடரால் வெகுளி குறிப்பிடப்பட்டது. - சந்திரன் சேக்கிழாரை அடைதற்கு நாணம் உற்ருன் என்றது அவனிடம் உள்ள களங்கம் பற்றி என்க. களங்க மாவது வஞ்சகம் என்றும் பொருள்படும் அன்ருே ? வஞ்சகர் வருதற்கு அஞ்சித் தம்மை மறைத்துக்கொள்வது இயல்பு. நஞ்சுடமை தான்.அறிந்து நாகம் கரந்துறைவும் அஞ்ஞா புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு-நெஞ்சில் கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார் கரவிலா நெஞ்சத் தவர்' என்ற நீதிப்பாடலை ஈண்டு நினைவு கொள்க. சான்ருேர் முனிவுஉருர். அவர்கட்குமுனிவு வரின் பெரி தாகும். அதனைத் தடுத்தல் அரிது. இதனேத்தான் வள்ளுவர், "குணம்என்னும் குன்றேறி நின்ருர் வெகுளி கணமேயும் காத்தல் அரிது’’ என்று அறிவுறுத்தினர். இதனுல்தான் ஆசிரியர், 'இனி முனிந்திடில் போக்கு வேறில்லை' என்றனர். பெரியோர்களால் பழிக்கப்பட்டவர், அற்பர் என்று வெறுக்கப்பட்டவர் ஆகியவர்கட்குப் புகழ் இல்லை. ஆகவே,