பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/698

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

616 சிற்றில் பருவம் இலம்என்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலம் என்னும் நல்லாள் நகும் என்றருளினர் வள்ளுவர். 'அலகுடை நீழலவர் பல குடை நீழலும் தம் குடைக் கீழ்க் காண்பர்” ஆதலின் உழுதல் புகழ்தரும் செயலாயிற்று. உழுவார் உலகத்தார்க்கு ஆணி. “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்' 'இரவார் இரப்பார்க்கு ஒன்று ஈவர்.' 'கரவாது கைசெய்து ஊண் மாலையவர்” “உழவினர் கைம்மடங்கின் விழைவது உம் விட்டோம் என்பார்க்கும் இல்லை நிலை” ஆதலின் உழுதல் உழவர்கட்குப் புகழாதல் உணர்க. இவற்றை எல்லாம் உணர்ந்தே திரு. பிள்ளை அவர்கள் 'ஏரால் உழுதல் புகழாம்' என்றனர். 'விதியும் அதுவாகும்' என்றும் கூறினர். இரண்டில் ஒன்று என்றது புகழ் விதி என்ற இரண்டில் ஒன்று. பொருந்தா நிலம் என்றது மணலால் சிறு வீடு கட்டி ஆடிய இடம். வீடு மணலால் கட்டப்பட்டது. அதனைக் காலால் சிதைத்தால் மெல்லிய காலுக்கு ஊறு உண்டாகும், ஆகவே, "வருந்தும் அரிய திருவடி' என்றனர். அதோடு மாசும் உறும் 'என்ற தல்ை அரிய திருவடி' என்றனர். சிற்றில் சிதைப்பதால் திருவடிகள் மாசுறும், மேலும் பல விதத்தில் ஊறுகள் ஏற்படும் என்பதைத் திருச்செந்துTர் முருகன் பிள்ளைத் தமிழ் அழகுற, தையல் மடவார் இழைத்தவண்டல் தன்னை அழிக்கும் அதுக்கல்ல தரளம் உறுத்தி உனது பொற்பூந் தண்டைத் திருத்தாள் தடியாதோ துய்ய தவளப் பிறைமுடிக்கும் சோதி எடித்து முகந்தணேத்துத் தோளில் இருத்தும் பொழுதுமணித் தோளில் புழுதி தோயாதோ