பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/712

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

630 சிற்றில் பருவம் என்பவளை ஒரு மனைவியாகக் கொண்டிருந்ததாகப் பாகூர்க் கல்வெட்டுப் பட்டயம் குறிப்பிடுவது கொண்டும் தெளிய லாம். 'உரை சிறந்து உயர்ந்த பட்டத்து ஒரு தனித் தேவி' என்றது சங்கா என்பவளை ஆகும். சேக்கிழார் உரை சிறந்து என்று ஏனைய பெண்களை எங்கும் குறிப்பிடாது ஈண்டுக் குறிப்பிட்டதன் நுண்கருத்து, பாகூர்ப் பட்டயத்துள் 'திருமாலுக்கு வாழ்க்கைத் துணைவியாகப் பொருந்திய திரு மகளைப்போல இராஷ்டரக்கூடர் குடும்பத்தில் தோன்றிய சங்கா என்ற மெல்லியலாள் நந்திவர்மருக்கு (கழற்சிங்கன்) வாழ்வரசியாக அமைந்தாள். அவளது பொறுமைக்கு நில மகளை உவமை கூறலாம். குடிமக்களால் தாயாகப் பாராட் டப்பட்ட பெருமைக்குரியவள். அரசன் செய்த நல்வினையே ஒர் உரு கொண்டால் போலத் துலங்கினுள். இவள் பேர் அழகுடையவள். நுண் அறிவு வாய்ந்தவள். பல்கலையில் வல்லுநள்.” என்று இவளைப்பற்றிக் கூறப்பட்டிருத்தலிளுல் என்க. இவற்றையெல்லாம் நோக்கும்போது இவர் பல கல் வெட்டுக்களையும் ஊன்றிக் கவனித்துத் தம் நூலில் செய்திகளை அறிவித்துள்ளார் அன்ருே, என்பது தெரிகிறது. இங்ங்ணம் பல சான்றுகளால் சேக்கிழார் வரலாற்றுப் புலமை மிகுதியாக உடையார் என்பது புலனுகிறது. சேக்கிழார் பெருமாளுர், பரஞ்சோதியாராம் சிறுத் தொண்டர் இரண்டாம் புலிகேசியுடன் பொருது வெற்றி கொண்டார் என்றும், மகேந்திரவர்ம பல்லவன் அமண் பள்ளிகளையும் பாழிகளையும் இடித்துக் குணபர ஈச்சுரம் என்ற கோவிலைக் கட்டினன் என்றும் கூறுதலால் அன்ருே. திருஞான சம்பந்தர் அப்பர் காலங்களை அறிய முடிந்தது! ஆகவே, இன்னோரன்ன அரிய குறிப்புக்களே விழைவ்ார்க்கு விழைந்த வண்ணம் ஈயும் புலவர் பெருமானுர் சேக்கிழார் ஆதலின், அவரைக் சிந்தாமணி என்றனர் திரு. பிள்ளை அவர்கள்.