பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/717

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றில் பருவம் 635 (அ. சொ) சீதவளம்-நீர்வளம், ஏதம் - து ன் ப ம், வளவன்-கரிகாற் சோழன், முனம்-முன்னர், அபயன்அனபாய சோழ மன்னன், அமாத்தியருள்-மந்திரிமார்களுள், போதம்-அறிவு, மருவும்-சேர்ந்திருக்கும், புகலேம்-சொல்ல மாட்டோம், பொலியும்-விளங்கும், நவிலேம்-சொல்ல மாட்டோம், புகலின்-சொன்னல், ஒரு குடி-ஒப்பற்ற குடி, மூவருளும்-அரி, அயன், அரன் என்ற மூவருள்ளும், நாதம்நாத தத்துவம், அகன்ற-கடந்த, நவிலின்-சொன்னல், செயல்-சிற்றில் செய்து விளையாடும் செயலை, நயவாதுவிரும்பாமல். விளக்கம்: வளவன் ஈண்டுக் கரிகாற்சோழன். அவன் காடுகெடுத்து நாடாக்கி நாற்பத்தெண்ணுயிரக் குடிகளேத் தான் கண்ட நாட்டில் குடியேற்றினன் என்பது வரலாறு. அதாவது கரிகால் சோழன் சிந்துமேதன் என்னும் பெயரிய வேடல்ை காஞ்சி நகருக்குள்ள இடத்தைத் தேர்ந்து மதில் களைக் கட்டிக் குடி ஏற்றிப் பெருநகர் உண்டாக்கி வளம்பெற ஆண்டனன். இதனைப் பெரிய புராணம், என்றும் உள்ள இந் நகர்கலி யுகத்தில் இலங்கு வேல்கரி கால்பெரு வளத்தோன் வன்தி றல்புலி இமயமால் வரைமேல் வைக்க ஏகுவோன் தனக்கிதன் வளமை சென்று வேடன் கண்டுரை செய்யத் திருந்து காதம் நான் குட்பட வகுத்துக் குன்று போலும்மா மதில்புடை போக்கிக் குடிஇ ருத்தின கொள்கையின் விளங்கும் என்று குறிப்பிடுதல் காண்க. இவ்வாறு குடி ஏற்றப்பட்டவர் நற்குடிப் பெருமக்கள் என்றும், இக்கு: யினர்போல் குடி ஏற்றப்பட்ட மற்ருெரு தொகையினர் பன்னிராயிரவர் என்றும், அவர் பசுங்குடி என்றும் வரலாறு கூறும். தமிழ் நாட்டில் வடநாட்டி னின்றும் கொணரப்புட்டுக் குடி ஏற்றப்பட்ட செய்தி