பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/723

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றில் பருவம் 64让 வாது செய்து மயங்கு மனத்தராய் ஏது சொல்லுவீர் ஆகிலும் ஏழைகாள் யாதோர் தேவர் எனப் படுவார்க் கெல்லாம் மாதே வன்அலால் தேவர்மற் றில்லேயே கூவ லாமை குரைகடல் ஆமையைக் கூவலோ டொக்கு மோகடல் என்றல்போல் பாவ காரிகள் பார்ப்பரி தென்பரால் தேவர் தேவன் சிவன்பெருந் தன்மையே எரிபெ ருக்குவர் அவ்எரி ஈசன துருவ ருக்க மதாவ துணர்கிலார் அரி.அ யற்கரி யானைஅ யர்த்துப்போய் நரிவி ருத்தம தாகுவர் நாடரே அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில் அருக்கன் ஆவான் அரன் உரு அல்லனுே இருக்கு நான்மறை ஈசனே யேதொழும் கருத்தி னை நினைப் பார்கன் மனவரே தாயின் நல்ல சங்கர னுக்கன்பர் ஆய உள்ளத் தமுதருந் தப்பெருர் பேயர் பேய்முலை உண்டுயிர் போக்கிய மாயன் மாயத்துப் பட்ட மனத்தரே என்பன. ஆகவேதான், சிறுமையர்கள் உண்மை உணர்ந்து'அப்படி மூவருள் ஒருவனெனப் பரமனேக் கூறின் அடைவது அடையும் என நன்கு தெரிந்தேம் ' என்றனர். அடைவது அடைத லாவது நரகமாகும். ஈண்டு மூவருள் ஒருவன் அல்லன் இறைவன். அவன், 'நாதம் அகன்ற பரமன் என்பதை நன்கு உணர்த்தினர் திரு. பிள்ளை அவர்கள். நாதம் என்பது நாத தத்துவம், அகன்ற என்பது அதற்கும் அப்பாற்பட்ட என்பதாம். பரமன் துரிய சிவமாகும். 'வேதம் கடந்த விமலன்' என்று கச்சியப்பரும் தெரிந்து கூறினர். இத்தகைய இறைவன் மூவருள் ஒருவன் என்பது சிவ நிந்தையாகும். நரகத்தையும் அடைவிக்கும். 41