பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/724

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

642 சிற்றில் பருவம் சிவப்பிரகாச சுவாமிகளும் இக்கருத்தைத் தமது நெஞ்சு விடு துதில், நஞ்சமர் கண்டைெடு நாரணனே ஒப்பாக்கும் பா நகர்" என்று கூறியுள்ளனர். அறிவை எலாம் கடந்துமணம் கடந்து மற்றை அறிவைஎலாம் கடந்துகடந் தமல யோகர் உளவை எலாம் கடந்துபதம் கடந்து மேலை ஒன்றுகடந் திரண்டுகடந் துணரச் சூழ்ந்த களவை எலாம் கடந்தண்ட பிண்ட மெல்லாம் கடந்துநிறை வானஅக் கடலே அன்பர் வளவையெலாம் இருள் அகற்றும் ஒளியே மோன வாழ்வேஎன் உயிர்க்குயிராய் வதியும் தேவே என்று வள்ளலார் இறைவன் நாதம் அகன்றவன் என்று அறிந்து கூறிய வாக்கை ஈண்டு நினைவு கூர்வோமாக. ஆழ்வாருள் சிறந்தவரான நம்மாழ்வார் சிவபெருமானே மூவருள் ஒருவன் என்றே கூறவில்லை. அவன் மூவரில் வேருன ஒரு தனி முதல் பரம்பொருள் என்பதை நன்கு தெளிவுற, 'ஒருவன் என்று ஏத்த நின்ற நளிர்மதிச் சடையன்” என்று விதந்து கூறியதைக் காண்க. சிறுமியர்கள், சேக்கிழாரை நோக்கி, 'மூவருள் ஒருவன், நாதம் அகன்ற பரமன் என்று நவிலின் அடைவது அடையும் என நன்று தெரிந்தேம்' என்றதன் கருத்து, நாத தத்துவம் கடந்த துரிய சிவத்தை மும்மூர்த்திகளில் ஒருவன் என்ருல்" எந்த நரகத்தை அடைவோமோ, அத்தகைய நரகத்தை நாங்கள் உம்மை நற்பத்தெண்ணுயிரக் குடிகளுள் ஒருவர் என்றும், அனபாயனது மந்திரிமார்களுள் நீரும் ஒரு மந்திரி என்றும், புராணம் செய்த பலருள் நீரும் ஒரு புராணம் செய்தவர் என்றும் கூறினல் அடைவோம்” என்று அறிவித்தவாரும். மேலும், அச்சிறுமியர்கள் சேக்கிழாரை, 'நாதங் கடந்த துரிய சிவமாக எண்ணினர்' என்பது தெரிய வருகிறது. இந்த அரிய பெரிய உண்மைகளை-சைவ சித்தாந்த செம்பொருளை-சிறுமியர்கள் மூலம் திரு. பிள்ளை