பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/727

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றில் பருவம் 645 மேலும், இவற்றையும் சுருக்கி, அதர்வசிகோயபநிடதம், அதர்வசிரோபநிடதம், காலாக்சினி ருத்திரோபநிடதம், கைவல்லியோபநிடதம், சு வேதாச்சுவதரோடபநிடதம் என்ற இவ்வைந்தையும் சிறந்த உபநிடதங்கள் என்பர். இவ்வைந்தைப் பஞ்சருத்திரம் என்றல் மரபு. உபநிடதங் களில் திருநீற்றின் மாண்பும், அதனைத் தரித்தலினுல் ஏற்படும் சிறப்பும் பெரிதும் பேசப்பட்டுள்ளன. 'உண்மாசு கழுவுவது நீறு என்றே உபநிடதம் உரைப்பக் கேட்டு' என்று பரஞ் சோதியார் இந்த உண்மையை அறிந்து உரைத்திருப்பதைக் காண்க. 'வேதத்தில் உள்ளது நீறு" என்பது நம் வேணுபுர வேந்தரின் அருள் வாக்கு. இது குறித்தே ஈண்டு, “உபநிடதம் புகலல் கேட்டும்” என்று கூறினர். சைவ சமயத் திருநீறு இந் நிலையில் வேத ஆகம உபநிடதங்களில் போற்றப்பட் டிருப்பதனுல்தான், திருமால் முதலிய தேவர்கள் இதன அணிந்து பேறு பெற்றனர். திருமால் திருநீறு அணிந்து திகழ்வதை நம்மாழ்வார் 'கரியமேணிமிசை வெளிய நீறு சிறிதே இடும் பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணுேர் பெருமான்' என்று விளக்கமுற விளம்பியுள்ளனர். நாயக நாயகி பாவனை நிலையில் பாடிய நம்மாழ்வார், வெறி விலக்குதல் என்னும் துறையில் அமைத்துப் பாடுகையில் 'கஜமுகா சூரனை அழித்த சிவபெரு மானது திருநாமமாகிய நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மகாமந்திரம் கூறி வெண்திருநீறு இடுமாறு தெளிவுறத் தெரி வித்திருப்பதை 'கவளக்கடாக்களிறு அட்ட பிரான் திருநாமத் தால் தவளப் கொடிக்கொண்டு நீர் இட்டிடுமின் தனியுமே” என்று பாடியிருப்பதைக் காண்க. தவளப்பொடி என்பது வெண்திருநீறு. இவ்வுண்மை இங்ங்னம் இருக்க, 'தன் திருநாமத்தைத் தானும் சாத்தியே' என்ற கம்பர் வாக்கை வைணவ பக்தர்கள் காட்டி, இராமன் நாமத்தை நெற்றியில் அணிந்தனன் என்று பொருள் கூறுவாராயினர். ஈண்டுக் கம்பர் நாமம் என்றது திருமண்ணை அன்று. ஓம் நமோ நாராயணு என்னும் திருப்