பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/729

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றில் பருவம் 647 மாலேந்திய குழலார்தரு மயல்போம்இடர் அயல்போம் கோலேந்திய அரசாட்சியும் கூடும்புகழ் நீடும் மேலேந்திய வானுடர்கள் மெலியாவிதம் ஒருசெவ் வேலேந்திய முருகா என வெண்ணி றணிந்திடிலே தவம் உண்மையொ டுறும்வஞ்சகர் தம்சார்வது தவிரும் நவம்அண்மிய அடியார் இடம் நல்கும்திறன் மல்கும் பவனன் புனல் கல்ைமண்வெளி பலவாகிய பொருளாம் சிவசண்முக எனவேஅருள் திருநீறணிந் திடிலே துயில்ஏறிய சோர்வும்கெடும் துயரம்கெடும் நடுவன் கைலேறிய பாசம்.துணி கண்டேமுறித் திடுமால் குயிலேறிய பொழில்சூழ்திருக் குன்றேறி நடக்கும் மயிலேறிய மணியேஎன வளர்நீ றணிந்திடிலே தேருப்பெரு மனமானது தேறும் துயர் ம்ாறும் மாருப்பிணி மாயும்திரு மருவும்கரு ஒருவும் விருப்பொடு வருகுர்முடி வேருக்கிட வரும்ஒர் ஆருக்கரப் பொருளே என அருள் நீறணிந் திடிலே என்பன வடலூர் இராமலிங்க சுவாமிகளின் பாடல்கள். ஆகவே, திரு. பிள்ளை அவர்கள் வைணவர்களுக்கு நல் நெறி சேரும் அருள் உபதேசங்களைச் செய்யும் முறையில் சிறுமியர் வாயின் மூலம், சிற்சிலர் (வைணவர்கள்) தம் நெற்றியில் திருமண் இட்டிருத்தலின், அம்மண்ணைச் சேக் கிழார் தம் காலால் கலைத்து விளையாடும் விளையாட்டு நிகழு மாயின், அவர்கள் திருநீறணிந்து மோகம் நீங்கி உய்வர் என் றனர். ஈண்டுத் திரு. பிள்ளை அவர்களின் சைவ சமயப் பற்றின் உண்மை நிலையினை உணரலாம். சிறுமியர்கள், 'பெருமானே! உமக்கு மண்ணைப் பொருந்து விளையாட விருப்பம் இருப்பின், எங்கள் மணல் வீட்டைக் காலால் சிதைக்கவேண்டா. வேண்டுமானல் வைணவர்கள் நெற்றியில் அணியும் திருமண்ணைக் கலைத்து விளையாடும் : அஃது அவர்களைத் திருநீறணியும் விருப்பத்தை யாகிலும் உண்டுபண்ணி அவர்கள் மோகம் நீங்கி உய்யும்