பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/735

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. அலைக்கும் புனல்சூழ் அம்பலத்தில் ஆடும் பெருமான் அருள் பெற்ருல் அவன் செய் தொழில்ஓர் ஐந்துண்டு அமைந்த தொழிலோ மேற்கோடில் நிலைக்கும் கட்ைஎன் ருெழித்தனையோ நினையா நிற்கும் அனுக்கிரகம் நீயே அதுசெய் யாவிடின்எம் நிரப்பு நீக்கு பவரியாரே மலைக்கும் பிறவிப் பிணிமருந்தே வாழ்த்து வார்சிந் தாமணியே வயங்கும் சைவப் பெருவாழ்வே மாருக் கருணை மாக்கடலே சிலைக்கும் தமிழ்த்தண் டகநாடா சிறியேம் சிற்றில் சிதையேலே செல்வம் செருக்கு குன்றையருள் செல்வர் சிற்றில் சிதையேலே (அ. சொ.) மலேக்கும்-ஸ்தம்பிக்கும், வருந்தும், பிணிநோய், வயங்கும்-விளங்கும், மா-பெரிய, சிலைக்கும்-ஒலிக்கும் புனல்-நீர், அம்பலத்தில்-பொற் சபையில், அவன்-அந் நடராசப்பெருமான், தொழில் ஒர் ஐந்து-படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்கள், நிரப்பு-வறுமை, கடை-கடையாய குணம், அது-அனுக்கிரகம் செயல். விளக்கம்: அம்பலம் என்றது ஈண்டு இறைவன் நடனம் புரியும், சபையாகும். அச்சபைகள் ஐந்து. அவையே பொன்னம்பலம், வெள்ளியம்பலம், இரத்தின அம்பலம், சித்திர அம்பலம், தாம்பர அம்பலம், என்பன. பொன்னம் பலம் சிதம்பரத்திலும், வெள்ளியம்பலம் மதுரையிலும், இரத்தின அம்பலம் திருவாலங்காட்டிலும், சித்திர அம்பலம் திருக்குற்ருலத்திலும், தாம்பர அம்பலம் திருநெல்வேலி