பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/736

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

654 சிற்றில் பருவம் யிலும் உள்ளன. திருப்புத்துார்ச் சபை சிற்சபை எனவும் கருதப் படுகிறது. இறைவன் இச்சபைகளில் ஆடுகின்றனன். அவ்வாட் டங்கள் காளிகதாண்டவம், கெளரிதாண்டவம், சத்தியா தாண்டவம், சங்காரத் தாண்டவம், திரிபுரதாண்டவம், ஊர்த்துவதாண்டவம், ஆனந்தத் தாண்டவம் என்பன. காளிகாதாண்டவம் படைத்தல் செயற்கும், கெளரி தாண்டவம், சந்தியாதாண்டவம் ஆகிய இரண்டும் காத்தல் செயற்கும், சங்காரத்தாண்டவம் அழித்தற் செயற்கும், திரிபுரதாண்டவம் மறைத்தல் செயற்கும், ஊர்த் துவதாண்டவம் அருளல் செயற்கும், ஆனந்தத் தாண்டவம் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து செயல்களும் ஒருங்கே செய்தற்கும் ஆகும். காளிகா தாண்டவத்தினைத் திருவாலங்காட்டுச் சபை யிலும், கெளரி தாண்டவத்தைத் திருப்புத்துார்ச் சபையிலும் சந்தியா தாண்டவத்தை மதுரை வெள்ளி அம்பலத்திலும், திரிபுரதாண்டவத்தைத் திருக்குற்ருலச் சபையிலும், ஊர்த் துவதாண்டவத்தைத் திருநெல்வேலிச் சபையிலும், சங் காரத்தாண்டவத்தை நள்ளிருளிலும் இறைவர் இயற்றுவர். ஊர்த்துவத் தண்டவம் திருவாலங் காட்டிலும் நிகழ்ந்துளது. காத்தல் தொழில் இரண்டாகும். ஒன்று இன்பக் காத்தல்; மற்ருென்று துன்பக்காத்தல். சடமதனில் சிருட்டி திதி சங்காரம் நிகழும் 必 தரும்உயிரில் திரோபவம் அனுக்கிரகம் தக்கும் 娱 திடமுறும் அத்திதி இரண்டாம் சூதுன்பம் ஆருத்தும் செய்தியின் அம்முறையால் செய்தொழில் ஆரும் என்று திருப்போரூர்ச் சிதம்பரசுவாமிகள் திதியை இரண் டாகக் கூறியதைக் காண்க. மேலே கூறப்பட்ட தாண்டவ வகைகள், இடங்கள் இன்னின்ன என்பதைக் கீழ்வரும் திருப்பத்தூர்ப் புராணப் பாடல்களால் தெளியலாம்.