பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/750

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

668 சிறுபறைப் பருவம் எனச் சிறப்பிக்கப்பட்டனர். இவர்கள் மதுரைக்கு மீனுட்சி அம்மையார் திருமண நிமித்தம் சென்ற காலையும், தில்லைக் கூத்தனது தரிசனம் காண்டல் இன்றி உணவு அருந்தோம் என்று கூறியதாகப் 'பொன்னவிர் கமலம் பூத்த புனிதநீர் ஆடித் தத்தம் நன்னெறி நியமம் முற்றி நண்ணினர் புலிக்கா லோனும் பன்னக முனியும் தாழ்ந்து பரவிஅம் பலத்துள் ஆடும் நின்னருள் நடம்கண் டுண்ப தடியேம்கள் நியமம்' என்று திருவிளையாடல் புராணம் கூறுதலால் இவர்கள் ஒங்கு முனிவர் ஆயினர்; கைகூப்பி அரமுழக்கம் செய்பவர் ஆயினர். 'அகிலாண்டகோடி ஈன்ற அன்னையே பின்னையும் கன்னி என மறைபேசும் ஆனந்த ரூபமயிலே' என்று தாயுமான வரும், 'கருதரிய கடலாடை உலகு பல அண்டம் கருப்ப மாய்ப் பெற்ற கன்னி' என்றும் சிவப்பிரகாசரு பாடி இருத் தலால் உமை உலகம் ஈன்றவள் என்பது பெறப்படுதல் காண்க. மேலும், அம்மையாரின் சிறப்பினே, சோதிப்பதி அன்றி வேருெரு தெய்வம் தொழுதற் கில்லை ஒதில் பிறர்என அச்சம் உருமல் உயிர்கள் எல்லாம் நீதிப் புதல்வர்கள் ஆயின. ஆதலின் நீகொள் கற்புப் பேதிப்பதன்றுகண் டாய்குன்றை வாழும் பெரியம் மையே என்றும் சிவப்பிரகாசர் பாடியுள்ளனர். இறைவனேயே விரும்புபவள் இறைவி ஆதலின், அவள் சிவகாமிஆயினள். இறைவன் சிவகாமிஅம்மையார் களிக்க நடம் புரிகின்றனர் என்பது அறிஞர் கொள்கை. "மாதொரு பாகம் நோக்கி மன்னு சிற்றம்பலத்தே ஆதியும் முடியும் இல்லா அற்புதத் தனிக் கூத்து' எனச் சேக்கிழாரும்,