பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/754

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

672 சிறுபறைப் பருவம் மன்னுகாவிரி சூழ்திரு வலஞ்சுழி வாணனை வாயாரப் பன்னிஆதரித் தேத்தியும் பாடியும் வழிபடும் அதனலே. என்ற திருஞானசம்பந்தர் திருவாக்கை உணரவும். திருக்கோவிலில் காலேயில் சங்கம் முதவிய இசைச் கருவி கள் முழங்கப்பெறும். இதனேத் திருவாசகத்தில் 'ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கெங்கும்' என்றும், கூவின பூங் குயில் கூவின கோழி, குருகு கள் இயம்பின இயம்பின சங்கம்' என்றும் கூறுமாற்றைக் காண்க. 'புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயில் வெள்ளே விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ' என்று ஆண்டாள் அம்மையாரும் குறிப் பிடுதல் காண்க. சங்கமே அன்றி ஏனைய இசைக் கருவிகளும் கோயில்களில் விடியற்காலையில் முழக்கப் படுவதைத் தொண்டரடிப்பொடி ஆழ்வார். ஏதமில் தண்ணுமை எக்கம்மத் தளியாழ்குழல் முழவயோடு இசைதிசை யெழுப்பி கீதங்கள் பாடினர்' என்று பாடியுள்ளனர். இவ்வாறு சங்கம், முரசம் கோவில்களில் முழக்கம்பெறும் வழக்கம், தொன் மையது, மரபும் ஆகும் என்பது சிலம்பில் வரும், துதல்விழி நாட்டத்து இறையோன் கோயிலும் உவணச் சேவல் உயர்த்தோன் நியமமும் மேழி வலன் உயர்த்த வெள்ளை நகரமும் கோழிச் சேவல் கொடியோன் கோட்டமும் அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும் மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும் வால்வெண் சங்கொடு வகைபெற் ருேங்கிய காலைமுரசம் கனகுரல் இயம்ப’’ என்னும் அடிகளில் காணலாம்.