பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/762

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

680 சிறுபறைப் பருவம் திருநீற்றின் மாண்பு, ஐந்தெழுத்து மேன்மை, உருத்தி ராக்கக் குறிப்பு ஆகியவற்றை மேலும் காணவிழைவார் சைவத் திருமுறைகளில் காணவும். இவ்வளவு பெருமைகட்கு உரிய இப்பொருள்களின் அருமை பெருமைகளை உணராத வர்கள், பூணுதவர்கள், புகலாதவர்கள் வீணர் என்பதில் ஐயம் இல்லை அன்ருே? சீவக சிந்தாமணியில் சிவமணம் கமழவில்லை என்று திரு பிள்ளை அவர்கள் கூறுவதன் கருத்து அவர் சைவசமயத்தின் பால்வைத்த அன்பு காரணத்தாலும், சைவ நூல்களினிடத்து அவர் கொண்ட பற்றின் காரணத்தாலும் என்க. சிந்தாமணி, சிவமணம் கமழ்தல் இல்லாத சிந்தாமணி என்று கூறுதற்கு இல்லே, சிவமணம் கமழும் நிலையிலும் சிந்தாமணி காணப்படுகிறது. சிந்தாமணியில் சிவமணம் கமழும் இடங்கள் உண்டு என்பதைக் கீழ்வரும் தொடர்களில், பாடல்களில் காணவும். ஒடுமுகில் கிறிஒளிர் திங்கள் சிகைவைத்தே மாடமது வார்சடைய வள்ளலே ஒக்கும்' என்றும், (வள்ளல் எனத் திருத்தக்க தேவர் சிவபெருமானை வாயாரக் கூறி இருப்பதைக் காணவும்) 'போகம் ஈன்ற புண்ணியன்' என்றும். (இந்த இடத்தில் பொருள் விளக்கம் செய்த நச்சிஞர்க் கினியர் போகம் ஈன்ற-தான் சத்தியும் சிவனுமாய் உலகத் துக்கெல்லாம் போகத்தை உண்டாக்கின புண்ணியன் என்ருர், திரிபுரத்தை அழித்தும் நஞ்சுண்டும் பல்லுயிர் களையும் காத்தலின்” என்று எழுதி விளக்கியுள்ளனர்) "கடிமதில் மூன்றும் எய்த கடவுளில் கனன்று சொன்னன்' என்றும் கூறியிருப்பதைக் காண்க. இவ் அடியில் கடவுள் என்ற சொல்லைச் சிவபெருமாளுர்க்கு ஆண்டிருப்பதையும் அறியவும்