பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/765

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுபறைப் பருவம் 683 அதனல் அபிசார யாக செய்தனர். அதிலிருந்து பாம்புகள், பூதங்கள், புலி, யானை முயல்கள், முதலியனவற்றை எழுப்பி, இறைவனே அழிக்க ஏவினர். அவற்றை முறையே ஆபரணங்களாகவும், கணங்களாகவும், கொண்டு மானேக் கையில் ஏந்தியும், புலி, யானை இவற்றைக் கொன்று அவற்றின் தோலை உடுத்தியும், முயலனைக் காலில் மிதித்தும் தமது பேராற்றலுடைமையை விளக்கினர். கஜமுகா சூரனை முனிவர் வேண்டு கோட்கிணங்கிக் கொன்று அதன் தோலைப் போர்த்துக் கொண்டன்ர் என்ற வரலாறும் உண்டு. இதனை, ஒருபு தத்தினைக் கவான் உற திருக்கரத் துகிரால் வெரிந்இ டைப்பிளந் தீர்.இரு தாள்புடை மேலக் குருதி கக்கியே ஒலிட அவனர்தம் குலத்துக் கரிஉ ரித்தினன் கண்டுநின் றம்மையும் கலங்க ஐயன் மிக்கதன் கதிரினைக் குருதிநீர் அருத மையல் யானவன் தோல் மேற் கொண்டனன் மறைந்தான் எனக் கந்த புராணம் கூறுதல் காண்க. சேக்கிழார், மேகம் மலைமீது தவழ்ந்திருக்கும் காட்சியினை வெகு அழகுற, அளிக்குலங்கள் சுளித்தகல அரவிந்தம் முகம்புவரப் பளிக்குமணி மரகதவல் லியில்கோத்த பான்மை எனத் துளித்தலை மெல்அறுகுபனி தொடுத்தசையச் சூழ்பனியால் குளிர்க்குடைந்து வெண்படாம் போர்த்தனையகுன்றுகளும் என்று வர்ணித்துள்ளதைக் காண்க. 'செல்” என்னும் சொல் மேகத்தையும் உணர்த்தும் செல்க என்னும் பொருளையும் தரும். இந்த இருபொருள் களும் பொருந்தச் சிலேடைப் பொருளில் மாயூரம் வேத நாயகம்பிள்ளே அவர்கள்,