பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/774

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

692 சிறுபறைப் பருவம் சுரமகளிர் கற்பகப்பூஞ் சோலைகளின் மருங்கிருந்து கரமலரின் அமுதுாட்டும் கனிவாய்மென் கிள்ளையுடன் விரவுநறும் குழல்அலேய விமானங்கள் விரைந்தேறிப் பரவியஏழ் இசைஅமுதம் செவிமடுத்துப் பருகினர் நலிவாரும் மெலிவாரும் உணர்ஒன்ருய் நயத்தலிளுல் மலிவாய்வெள் எயிற்றரவம் மயில்மீது மருண்டுவிழும் சவியாத நிலைஅரியும் தடம்கரியும் உடன்சாரும் புலிவாயின் மருங்கணையும் புல்வாய புல்வாயும் மருவியகால் விசைத்தலையா மரங்கள் மலர்ச் சினைசவியா கருவரைவீழ் அருவிகளும் கான்யாரும் கலித்தோடா பெருமுகிலின் குலங்கள்புடை பெயர்ஒழியப் புனல்சோரா இருவிசும்பின் இடைமுழங்கா எழுகடலும் இடைதுளும்பா இவ்வாறு நிற்பனவும் சரிப்பனவும் இசைமயமாய் மெய்வாழும் புலன்கரணம் மேவியஒன் ருயினவால் மொய்வாச நறுங்கொன்றை முடிச்சடையார் அடித்தொண்டர் செவ்வாயின் மிசைவைத்த திருக்குழல்வா சனேஉருக்க என்ற பாடல்களின் பொருளைக் காண்க. இவ்வாறே கண்ணன் குழல் ஊதியபோது தேவமாதர் களும், வித்தியாதரர்களும் மகிழ்ந்ததையும், அஃறிணைப்