பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/789

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுபறைப் பருவம் ‘707 கொடு என்பது கொண்டு என்பதன் குறையாகும். இவ் வாறு சொற்கள் இடையே குறைதல் உண்டு என்பது இலக் கணவிதி. 'ஒரு மொழி மூவழி குறைதலும் அனைத்தே" என்பது நன்னூல் விதி தில்லை அம்பலவன் திருக்கூத்துத் தேவர் மக்கள் யாவ ராலும் போற்றி வணங்கப்படும் நிலையினது என்பதைச் சேக்கிழார், நீடும் திருவுடன் நிகழும் பெருகொளி நிறை அம் பலம் நினை வுறநேரே கூடும் படிவரும் அன்பால் இன்புறு குணம்முன் பெறவரு நிலைகூடத் தேடும் பிரமனும் மாலும் தேவரும் முதலாம் யோனிகள் தெளிவொன்ரு ஆடும் கழல்புரி அமுதத் திருநடம் ஆரா வகைதொழு தார்கின்ருர் என்று கூறுமாற்ருல் 'பல்லோர் அஞ்சலிசெய் நடநவில்” என்பது உண்மையாதல் காண்க. மேலும் திருமந்திரம், "தேவர் உறைகின்ற சிற்றம்பல மென்று தேவர் உறைகின்ற சிதம்பரமே என்றும், தேவர் உறைகின்ற திருஅம்பல மென்றும், தேவர் உறைகின்ற தென் பொது ஆமே” என்று கூறுதலும் காண்க. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், திருநாவலூரர் ஆகிய மூவர் முதலிகளும் மிக்க புகழ் ஒளியுடையர் ஆதலின், : நனி வில் இடும்” என்ற அடை கொடுத்தனர். இம் மூவர் திருப்பெயர்களும் மந்திரங்கள் ஆகும். திருஞான சம்பந்தர் திருநாமம் மந்திரம் என்பதை, மீனவன் செவியி னுாடு மெய்யுணர் வளிப்போர் கூற ஞானசம் பந்தர் என்னும் நாமமந் திரமும் செல்ல ஆனபோ தயர்வு தன்னை அகன்றிட அமன ராகும் மானமில் லவரைப் பார்த்து மாற்றம்ஒன் றுரைக்க அற்ருர்