பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/792

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

710 சிறுபறைப் பருவம் வரக்கர்களேயும் தண்டித்தனர். தண்டித்து அருளும் செய் துள்ளனர். இதனைச் சுந்தரர், மூவெயில் செற்ற ஞான்று உய்ந்தமூ வரில் இருவர் நின்திருக் கோயில் வாய்தல் காவலா வார்என் றேவிய பின்னை ஒருவநீ கரிகா டரங்காக மானே நோக்கி யோர் மாநடம் மகிழ மணிமுழா முழக்கஅருள் செய்த தேவ தேவ நின்திருவடி அடைந்தேன் செழும்பொழில் திருப்புன்கூ ருளானே என்று பாடி இருத்தலைக்கொண்டு தெளிக. (89) 9. தந்து புராணம்எவ் வளவச யிற்றென நாடுறும் அனபாயன் நகைமகிழ் பூப்ப மணிக்கால் ஆயிரம் நண்ணிய மண்டபவாய் வந்து விராவும் இடத்தில் அமர்ந்து வயங்குறு கையேட்டின் மாண்பார் கண்டம் கொண்டங் கெழுதுநர் மாரு தேஎழுதப் பிந்து வரைந்த எழுத்தினுள் ஒன்றும் பெயரா தக்கரமாம் பெயர்ப்பொருள் தேற்றுபு நிலைபெற யார்க்கும் பெட்கும் விருப்பம்எழ முந்து தமிழ்க்கவி பாடிய புலவன் முழக்குக சிறுபறையே முழுமணி மரபிக் குன்றத்துரன் முழக்கு க சிறுபறையே (அ. சொ. நந்து-வளரும், அனபாயன்-அனபாய சோழன், மணி-அழகிய, பூப்ப-அடைய, விராவும்-பொருத்த