பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/798

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

716 சிறுபறைப் பருவம் குருபரரும் 'பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப் பசுங் கொண்டலே' என்றும் பாடியுள்ளனர். இவ்விரு வரலாறு களால் முந்துகின்ற தமிழ் என்பது உண்மை ஆகும் அன்ருே? ஆகவே 'முந்து தமிழ்' என்றனர். காஞ்சிபுரத்தில் வரதராசப்பெருமாளின் திருவிழாவில் தமிழ் வேதமாகிய ஆழ்வார்களின் அருளிப்பாடு முன்னர் பாடிக் கொண்டு போக, அதன் பின் பெருமாள் போவதை இன்றும் காணலாம். ஆகவே இதுவும் முந்து தமிழ்தானே. (90) 10. தங்கு தமக்கெதிர் நின்றுளம் உருகத் தரிசித் திடுவளவன் தன்செவி பரிசனர் அம்செவி மறையவர் தம்செவி யும்கேட்க எங்கும் அளாம்புகழ் இச்சே வையர்கோன் யாமே முதல்நல்க எம்.அடி யார்வர லாறு முழுக்க இனிக்கப் பாடினனுல் பொங்கு விருப்பில் கேட்குக என்னுப் பொன்அம் பலவாணர் பொலிதிரு வாக்கடி ஞெகிழியின் ஒலியொடு பொற்ப எழுப்பஅருள் முங்கு தமிழ்க்கவி பாடிய புலவன் முழக்குக சிறுபறையே முழுமணி மாடக் குன்றத் தூரன் முழக்குக சிறுபறையே (அ. சொ. வளவன்-அனபாய சோழ மன்னன், பரிசனர்-அரச சிப்பந்திகள், கடவுள் பணிபுரிவோர். அஞ்செவி-உள்செவி, அழகிய செவி, மறையவர்-தில்லைவாழ் அந்தணர், அளாம்-நிறைவும், சேவையர் கோன்-வேளாளப் பெருந்தகையாருக்கு, முதல்-உலகெலாம் என்னும் முதல்