பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/803

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுதேர்ப் பருவம் T21 கோல்-உழவு வெருதுகளை ஒட்டக் கையில் கொள்ளும் சிறுதாற்றுக் கோல். விளக்கம்; ஆண்பால் பிள்ளைப் பருவத்தில் பத்தாவது பருவமாக அமைவது சிறுதேர்ப் பருவமாகும். இது குழந்தையைச் சிறுதேர் உருட்டி விளையாடுமாறு வேண்டும் பருவமாகும். இது நான்காம் ஆண்டு நிகழ்ச்சி என்க. 'நான் காம் ஆண்டில் சிறுதேர் உருட்டலும்” என்பது பிங்கலந்தை. தமிழ் நாட்டு மூவேந்தர்கட்கும் தனித்தனி அடையாளமலர் உண்டு. இதனே, வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்துபுகழ்ப் போந்தை வேம்பே ஆர்என வரூஉம் என்னும் தொல்காப்பிய நூற்பாவால் அறியலாம். இம் முறைக்கு இணங்க ஈண்டுச் சோழற்குரிய அடையாளமலர் ஆத்தி ஆதலின், மருவாய் நறுந்தாதகித் தொங்கல் வளவர் கோமகன்' என்றனர். சில மலர்கள் மனமின்றி இருத்தல் உண்டு. இதனை 'இனகுழ்த்தும் நாருமலர்' என்று வள்ளுவர் கூறுமாற்ருலும் அறியலாம். ஆணுல், தாதகி மன முடையதாகவும், அம்மணமும் நல்ல மனமாகவும் இருப்பது பற்றி, நறுந் தாதகி என்றனர். வளவர் என்பது சோழர் மரபிற்கே சிறப்புடன் வழங்கப்பெறும் சொல்லாகும். ஈண்டு, அச்சோழமரபினருள் ஒருவனுனஅநபாயனே இச்சொல் குறிக் கிறது. இவனே சேக்கிழார் காலத்து மன்னன். அனபாயச் சக்ரவர்த்தி சேக்கிழார் பெருமானுக்கு மணிக்கவரி வீசும் மாண்புபெற்றமையில்ை, 'கோமகன்” ஆயினுன் மணிக்கவரி வீசப் பலரும் முந்தியிருக்க வேண்டும். அங்ங்ணம் முந்தின வர்கள் அடையும் பேறு தனக்கு அமையவேண்டி, அவர்கள் வீசுவதைத் தவிர்த்துத் தான் வீசவேண்டும் என்ற நோக்கம் இம்மன்னன் பால் இருந்தமையினே 'வாங்கி' என்னும் சொல் அறிவித்து நிற்கிறது. இதுமட்டும் இன்றி, செறிமதயா னைச்சிரத்தில் பொற்கலத்தோ டெடுத்துத் திருமுறையை இருத்தியபின் சேவையர்கா வலரை முறைமைபெற ஏற்றிஅர சனும்கூட ஏறி முறைமையில்ை இணைக்கவரி துணைக்கரத்தால் விச 46