பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/806

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'724 சிறுதேர்ப் பருவம் அவன் அருள் வழிப்பட்டுத் தத்தம் மரபில் வரும் குரவர் பலர் நூலையும் தழிஇக் கோடற்கு என்க' என்பது. இக் காலத்தில் இறைவன் உலாப் போதுங்கால் வேத பாரா யணம் வருவதுபோல, அடியார்களும் அன்பர்களும் உலாப் போதுங்கால் வேதியர்கள் வடமொழி வேத பராயனம் செய்துகொண்டுவர வேண்டும் என்பது முறையாகும். ஆனல், எங்கே செய்கிருர்கள் ? தமிழ் மறை ஒதப்பட்டு வருதல் Զ. 6ծմI 65) ԼD - - அன்டர்களைக் கண்டதும் அரனென எண்ணி அவர்களை வணங்கவேண்டும் என்பது நமது சைவ சித்தாந்த முடிவு. இதனைத்தான் நமது சிவஞான போதப் பன்னிரண்டாம் நூற்பா, செம்மலர் நோன்தாள் சேரல் ஒட்டா அம்மலம் கழிஇ அன்பரொடு மரீஇ மாலற நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயம் தானும் அரன் எனத் தொழுமே என்று கூறுகிறது. இங்ங்னம் மாலற நேயம் மலிந்தவர் வேடத்தை வணங்கப்பெற்றவர் மீண்டும் தாயின் கருவில் உருர் என்பது துணிவு ஆதலின், சேக்கிழாரை வணங்கும் அன்பர்கள் கருஉருர் என்ற உறுதிப் பாட்டினை 'கருவாய் உருமற்றையோர்’ என்றனர். தீவிர அன்புடையவர்கள் குவித்த கையினே எடுக்கவும் பெருர் என்பது பெற்ரும் ஆத வின், "தலைக்குமேல் கைகுவித்து, ஏத்தி, மேவ” என்றனர். குவித்த கையினே எடார் என்பதை மணிமொழியாரும், மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து உன்விரையார் கழற்கு என் கைதான் தலைவைத்துக் கண்ணிர் ததும்பி வெதும்பி உள்ளம் பொய்தான் தவிர்ந்து உன்னைப்போற்றி சயசய போற்றி என்னும் கைதான் நெகிழவிடேன் உடையாய் என்னைக் கண்டுகொள்ளே’