பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/808

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

726 சிறுதேர்ப் பருவம் ஏரால்எண் திசைவளர்க்கும் புகழவே ளாளர் ஏர்அடிக்குப் சிறுகோலால் தரணி ஆளச் சீராரும் முடியரசர் இருந்து செங்கோல் செலுத்துவர்வே ளாளர்புகழ் செப்ப லாமோ என்று உமாபதியாரும், வெங்கோபக் கலிகடந்த வேளாளர் விளைவயலுள் பைங்கோல் முடிதிருந்தப் பார்வேந்தர் முடிதிருந்தும் பைங்கோதைக் கடல்தானைப் போர்வேந்தர் நடத்து பெருஞ் செங்கோலை நடத்துங்கோல் ஏர்அடிக்கும் சிறுகோலே என்று கம்பரும் கூறுகின்றனர். ஆகவே, உழவர்களே நாட்டுக்கு அச்சாணி போன்றவர். அவ்வுழவர் மரபில் சேக் கிழார் தோன்றினமையில் அவரை, 'சிறுகோல் எடுத்து அரசு செங்கோல் நிறுத்தினேன்' என்றனர். சேவையர் குல மாகிய வேளாளர்குலத்துக்கே இவர் பெருமை தந்து பிறங்கியதால் சேவையர் குலாதிபர் எனப்பட்டனர். அந்தணர், அரசர், வணிகர் ஆகிய மூவரையும் காக்கும் மாண்புடையவர்கள் வேளாளர் என்பதைக் காஞ்சிப்புராணம், முருகுயிர்த் தலர்ந்த மலரவன் தனது முகமுதல் உறுப்பெலாம் தாங்கிக் சரணம் என்றுரைக்கும் உறுப்பினில் தோன்றிச் சாற்றும்.அம் முகம்முதல் உறுப்பின் வரும்ஒரு மூவர் தங்களே உழவின் வண்மையால் நிலைபெறத் தாங்கும் உரியவே ளாண்மை பூண்டபேர் தமக்கே உடையவர் இடம்பல அவன என்கிறது. (92)