பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/832

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

750 சிறுதேர்ப் பருவம் மாநீர் வேலி வச்சிர நன்னட்டுக் கோனிறை கொடுத்த பட்டிமண் டபமும் மகதநன் ட்ைடு வாள்வாய் வேந்தன் பகைப்புறத்துக் கொடுத்த பட்டிமண் டபமும் அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த நிவந்தோங்கு மரபில் தொரண வாயிலும் என்று சிலப்பதிகாரம் புலப்படுத்தும் ஆற்றை உணர்க. அசோக சக்ரவர்த்தி பாரதப் பகுதியில் பெரும்பாலான வற்றை ஆண்டவன். தனக்குப் பணியாத கலிங்க மன்னனை யும் அவன் பணிய வைத்தான் என்பதைப் படிக்கிருேம். ஆனல், தமிழ் நாட்டில் அவன் கால் எடுத்து வைத்ததாக அவனது வரலாற்றில் இல்லை. அதனைச் சுதந்தர நாடாகவே விட்டு விட்டனன். இஃது ஆணித்தரமான வரலாற்று உண்மை. இங்ங்னம் விட்டமைக்குக் காரணம், மூவேந்தர் களின் ஆற்றலே அவன் உணர்ந்தமையால் என்று கூறின் வியப்பில்லை அன்ருே? கரிகாற் சோழன் தனது வடநாட்டுச் செலவில் இமயத் தில் கணவாய் எடுத்து அதன் வழிச் சென்றனன் என்ற குறிப்பு, அங்கு வ்ழங்கப்பெறும் 'சோழர் கணவாய்” என்ற பெயர்கொண்டு தெளியலாம். அக்கணவாய் அமைந்த மலைப் பகுதியினை சோழ மலைத் தொடர் "Chola range’ என்று இன்னும் வழங்கப்படுகிறதாம். இவ்வாறு உள்ளதாக திரு. மு. இராகவையங்கார் தமிழ் வேந்தர்களின் இமயப் படை எடுப்பு என்ற கட்டுரையில் வரலாற்று ஆசிரியர்கள் ஒப்புக்கொள்ளும் அளவுக்கு ஆணித்தரச் சான்றுடன் எழுதி யுள்ளனர். கரிகால் சோழன் இமயத்தில் புலிப்பொறி நாட்டிய தைத் தனிச் சிறப்புடன் இளங்கோ அடிகள்,