பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/841

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுதேர்ப் பருவம் 7.59 கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை என்றும், வைப்புழிக் கோட்படா வாய்த்தீயின் கேடில்லே மிக்க சிறப்பின் அரசர்செறின் வவ்வார் எச்சம் எனஒருவன் மக்கட்குச் செய்வன விச்சைமற் றல்ல பிற என்று நாலடியாரும், 'மால்படு புந்தியின் மறுவில் சேதனம் பால்படும் உயிர்க்கெலாம் பவத்தின் மாண்பயன் நூல்படு கல்வியின் நுவல்வ ளத்தினின் மேல்படு கின்றதில் விழுமி தில்லையே” என்றும், திருமைகொள் வளனெடு திதில் கல்வியாம் இருமையின் ஒன்றினை எய்தி டாதெனின் அருமைகொள் அவ்வுயிர் அதனின் ஆற்றவும் பெருமைய துடையது பேயின் தோற்றமே, என்றும் கந்த புராணமும் கழறுதல் காண்க. 'கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி'என்பது கொன்றைவேந்தன் 'கல்வி தாழ்தலின்றியே கற்ருல் வரும் அறிவு, சேல்வத்தால் ஆகுமோ” என்று வினவுகிறது திருமலை வெண்பா. மேலும் புறநானுாறு, உற்றுழி உதவியும் உருபொருள் கொடுத்தும் பிற்றைநில திரியாது கற்றல் நன்றே பிறப்போர் அன்ன உடன்வயிற் றுள்ளும் சிறப்பின் பாலால் தாயும்.மனம் திரியும் ஒருகுடிப் பிறந்த பல்லோ குள்ளும் மூத்தோன் வருக என்ன தவருள் அறிவுடை யோன் ஆறு அரசும் செல்லும் வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே என்கிறது.