பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/845

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுதேர்ப் பருவம் 763 மணக்குடவர் 'தத்தம் குலத்திற்கும் இல்லறத்திற்கும் ஏற்ற ஒழுக்கமுடையராதல்’ என்றனர். பாரதியார், 'ஒழுக்க முடைமையாவது தான் படித்த நன்னெறியை மறவாமல் மரளுந்த மட்டும் கொண்டு ஒழுகுதல் என்றவாறு' என்றனர். இவ்வாறு கூறப்படும் ஒழுக்கம் மக்கட்குச் சிறப்பினேயே தரும். இஃது இம்மை மறுமையாகிய ஈர் இடத்திற்கும் துணையாய் நிற்பது. இதனால்தான் இவ்வொழுக்கத்தை மக்கள் தம் தம் உயிரினும் சிறந்ததாகக் கருதி, அது நீங்கா வண்ணம் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்பர் வள்ளுவர். இக் கருத்தையே விநாயக புராணம், "சூழ்ந்து துணேயால் சிற்றின்பம் சுரக்கும். அதல்ை உயிர்தனினும் வாழ்ந்த ஒழுக்கம் ஒம்பிடுக, வழுக்கின் இடும்பையே தருமே” என்கிறது. ஒழுக்கம்தான் குலனுடைமை இப்பண்பில் தவறினல் இழிபிறப்பே ஆகும். குடிப்பிறப்பினுலும் பெருமை இல்லை. பிறப்பொழுக்கம் தவறின் உயர்பிறப்பும் இழி பிறப்பாகும் என்றும் வள்ளுவர் வரைந்துள்ளனர். 'மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப் பொழுக்கம் குன்றக் கெடும்' என்பது வள்ளுவர் வாக்கு ஒத்து என்பது வேதம். ஒழுக்கம் பற்றி விநாயக புராணம் தாழ்ந்த வருணத் துதித்தோரும் தக்கோர் ஆவர் ஒழுக்கத் தால் வீழ்ந்த ஒழுக்கத்தார் இழிவர் மேலோம் வருணத் துரித்திடினும் என்று செப்புகிறது. ஒழுக்கம் அல்லாதவன் உயர்நிலை அடைய முடியாது. ஒழுக்கத்தால் மேன்மை அடையலாம். ஒழுக்கத்தினின்று இழிந்தால் பெரும்பழியே எய்தும். இதனைப் பழமொழி நானுாறு, கல்லா தவரிடைக் கட்டுரையின் மிக்கதோர் போல்லாத தில்லை ஒருவர்க்கு-நல்லாய் இழுக்கத்தின் மிக்க இழிவில்லை இல்லை ஒழுக்கத்தின் மிக்க உயர்வு என்று உணர்த்துகிறது. நல் ஒழுக்கமே அறத்திற்குக் காரண மாகும் ஒழுக்கப்பண்பு இருக்குமாயின், தீயமொழிகளை