பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/864

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

782 சிறுதேர்ப் பருவம் புராணம் என்பது பழைய வரலாறு. அது வேதஆகமப் பொருள்களே வரலாற்று வழி எடுத்துக்காட்டும் நூலாகும். மாதர் என்னும் சொல் மாது+அர் என்று பிரியும். மாது என்னும் சொல்லிற்கு அழகு என்பதே பொருளாதலின், அவ் வழகுடையாரை மாதர் என்றனர். சில குற்றியலுகரம் அர் என்பது சேர்ந்து ஈற்றுப் போலிக்கு உதாரணமாக அமையும். அங்ங்னம் அமைந்த மொழியே மாதர் என்பது. ஆகவே, அம்கலுழும் மாதரார் என்றனர். மாதர்கள் குழைகளைக் கழற்றி எறிவர் என்பதைப் புலவர் கூறும் கற்பனை மரபாகும். இதனே 'நேரிழை மகளிர் உணங்குளுக் கவரும் கோழி எறிந்த கொடுங்கால் கனம்குழை' என்று பட்டினப் பாலையில் வருதலைக் காணவும். இக்குழைகளே வீதியில் செல்வாரைத் தடுக்கும் என்பதும் புலவர் கூறும் வழக்கமாகும். இதனேயும் அப்பட்டினப்பாலே "கனம்குழை பொன்கால் புதல்வர் புரவியின் றுருட்டும் முக்கால் சிறுதேர் முன்வழி விலக்கும்” என்று குறிப்பிடுகிறது. இதை உளத்தில் கொண்டே, 'குழை அன்றித்தடுப்பார் இலர்' என்றனர். சேக்கிழாராம் குழந்தை சிறுதேர் உருட்டற்கு மாதர் எறிந்த குழைதடை செய்யும் ஆதலின், அதனையும் அகற்றி ளுேம்; இனித் தடையின்றி உமது தேரை உருட்டலாம்: ஆக உருட்டி அருள்க என்று வேண்டுவராயினர். ஈண்டுச் சேக்கிழார் மண்ணகத்துச்சூரியனுகக் கூறப்பட்டிருப்பதைக் காண்க. (99)