பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/866

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

784 சிறுதேர்ப் பருவம் அருணகிரியார் குறிப்பிடும்போது, 'நிறைகனி அப்பமொ டவல்பொரி' என்றும், இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப்ப ருப்புடன் நெய் எட்பொரிய வல்துவரை இளநீர்வண் டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள ரிப்பழம்இ டிப்பல்வகை தனிமூலம் மிக்கஅடி சில்கடலை பட்சணம் எனக்கொள் என்றும் கூறுதல் காண்க. இதல்ைதான் "மோதகம் கனி பலவும் மற்றவும்” என்றனர். கிருஷ்ணன் விநாயகரை மகிழ்விக்க எந்தெந்தப் பொருள்களைப் படைத்து இறைஞ்சின்ை என்பதைச் காஞ்சிப்புராணம், கண்ணனும்மற் றினிஎன்னே செயல்என்று கடுகச்சென் றுண்ணமைந்த பாலடிசில் கனிவருக்கம் உறுசுவைய பண்ணியங்கள் எனப்பலவும் அமுதுசெயப் படைத் திறைஞ்ச அண்ணல்வயப் பகட்டேந்தல் அத்தொழிலின் மகிழ்ந்திருந்தான் என்று கூறுகிறது. குன்றத்தூர் வாசிகள் விநாயகப் பெருமான் மகிழும் வண்ணம் அவர்க்கு வேண்டியவற்றை எந்து வழிபடுதலின், அவ்வூர்க்குத் துன்பமும் குற்றமும் அடையா. இவ்வூர்க்கு மட்டும் அன்று. இவலுரைச் சூழ்ந்த புறநகர்க்கும் மேலே கூறிய தீங்குகள் வரா என்ற உறுதிப்பாட்டை முதற்கண் அறிவித்துள்ளனர். ஆகவே, சேக்கிழார் தமது சிறு தேரைத் தடையின்றி உருட்டலாம். ஊறு பாடோ, நவையோ வந்துரு. இவ்விரண்டையும் தம்மை வழி படாதவாக்கு வருவிக்கும் நாயகப் பெருமானுக்கு வழிபாடு ஆ ற்றிவிட்டனர் என்பதைத் தெளிவுறக் கூறியுள்ளனர். அச்சுமுதல் வலியவே என்றதன் குறிப்புச் சேக்கிழாரது தெரின் அச்சு, விநாயகரைக் குன்றத்துார் வாசிகள் வழிபட்ட