பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/872

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

790 சிறுதேர்ப் பருவம் பாடல் தேவாரம் எனவும், சம்பந்தர் பாடல் திருக்கடைக் காப்பு எனவும், சுந்தரர் பாடல் திருப்பாட்டு எனவும் அறிஞர் பெருமக்களால் கருதப்பட்டு வருதலின் இவ்வாறு கூறினர் என்க. சாந்தலிங்க சுவாமிகள் பாடிய நூல்களுக்கு உரை கண்ட திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் முப் புலவர்கள் பாடிய பாடல்களே மேற்கோளாக எடுத்து ஆளு கையில் இவ்வாறே மூவர்களின் பாடல்களை மேலே கூறிய வாறு தனித் தனிப் பெயர்களேக் கூறிக் குறிப்பிட்டுள்ளனர். தமிழ் என்பது மூவர் பாடிய பாடல்களேயே குறிக்கும் என்ற குறிப்பு 'மொழிக்கு மொழி தித் கிப்பாகும் மூவர் சொலும் தமிழ்' என்று தவராச சிங்கமாம் தாயுமான சுவாமிகள் பாடுதலால் அறியலாம். ஈண்டுத் திரு பிள்ளை அவர்கள் மூவர் பாடல்களின் பொருளே நன்கு ஆராய்ந்து பல பாடல்களைப் பாடி னர் என்று கூறியதன் கருத்துப் பெரிய புராணத்துள் இம் மூவர்களின் வரலாறு சிறப்பாக எடுத்துப் பேசப் பட்ட தளுல் என்க. என்ருலும், சேக்கிழார் சைவ சமய குரவர் களுள் நால்வர்களுள் ஒருவரான மாணிக்க வாசகர் பாடி யுள்ள திருவாசகம் என்னும் நூலையும் நன்கு ஆய்ந்து பாடியுள்ளார் என்பதையும் நாம் மறத்தல் கூடாது. இக் கருத்தை நிலைநாட்டச் சில எடுத்துக்காட்டுக்களை ஈண்டுக் காண்போமாக. புத்தன் முதலாய புல் அறிவில் பல்சமயம் தத்தம் மதங்களில் தட்டுளுப்புப் பட்டுநிற்கச் சித்தம் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும் அத்தன் கருணையினுல் தோணுக்கம் ஆடாமோ என்பது திருவாசகம். இத்தொடரைச் சேக்கிழார், வந்து மிகைசெய் தாதைதாள் மழுவால் துணித்த மறைச்சிறுவர் அந்த உடம்பு தன்னுடனே அரனர் மகளுர் ஆயினர்