பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/880

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"98 சிறுதேர்ப் பருவம் நால்வர் ஆவார் அப்பர், சம்பந்தர் சுந்தரர், மாணிக்க வாசகர் என்போர். அப்பர் சித்திரைத்திங்கள் சதயத்தில் முத்தி பெற்றபோது, . "வானவர்கள் மலர்மாறி மண்ணிறைய விண்ணுலகின் மேனிறைந்த ஐந்துபேர் இயஒலியும் விரிஞ்சன்முதல் யோனிகளா யினலெல்லாம் உள் நிறைந்த பெருமகிழ்ச்சி தானிறைந்த சித்திரையில் சதயமாம் திருநாளில்' என்றும், சுந்தரர் கைலே சென்றபோது, தேவர்களும் ஏனையோரும் வந்து வரவேற்றுப் போற்றிய நிலையினை, . ஏற்ற தொண்டரை அண்டர்வெள் ஆனையின் எதிர்வலம் கொண்டேற்று நாற் றடங்கடல் முழக்கென ஐவகை நாதம்மீ தெழுந்தார்ப்பப் போற்றி வானவர் பூமழை பொழிந்திடப் போதுவார் உயிர்எல்லாம் சாற்றும் ம்ாற்றங்கள் உணர்பெரும் துணைவரை மனத்தினில் கொடுசார்ந்தார் என்றும், திருஞானசம்பந்தர் முத்தி பெற்ற நிலையினை, கண்ணுதலான் திருமேனி உடன்கூடக் கவுணியனர் நண்ணியது துாரத்தே கண்டுநனுகப் பெரு விண்ணவரும் முனிவர்களும் விரிஞ்ஞனே முதலோரும் எண்ணியவ்ர் ஏகறவு தீர எடுத் தேத்தினர் என்றும் சேக்கிழார் பாடிக்காட்டி இருத்தலானும், திரு வாத ஊரார் கூத்தப் பெருமானது குஞ்சிதபாதத்தில் குளிர்ந்திருக்கும் பேறுபெற்ற நிலையினைக் கடவுள் மாமுனிவர், பூத நடங்கள் தொடங்கின போதம் மகிழ்ந்தனு குங்கண நாதர் புகழ்ந்தனர். தும்புரு - நாரதர் அங்கிசை கொண்டனா