பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 பாயிரம் என்று அருளிப் போந்தார். ஓங்கு என்னும் சொல் முதல்நிலை தீபக அணியாகக் கயிலை மலைக்கும், பரம்பரைக்கும் அடை மொழியாக நின்று சிறப்புச் செய்கிறது, நந்தி அடிகட்கு உறுமரபில் எட்டாவது பின் தோன்றல் உமாபதி சிவம். உமாபதி சிவம் எட்டாவது, பின் தோன்றல் என்பதை அகச்சந்தானத்தார் நால்வர்,புறச் சந்தானத்தார் நால்வர் என்று குறிப்பிட்ட இடத்து விளங்குதல் காண்க. திருவாவடுதுறை என்பது சோழ நாட்டில் பாடல் பெற்ற சிவதலங்களில் ஒன்று. இது கும்பகோணம் செல்லும் போது இடையில் வரும் நரசிங்கப் பேட்டை ரயில் அடிக்குத் தென் கிழக்கே ஒரு கல் தொலைவில் உள்ளது. பஸ் போக்கு வரவும் உண்டு. இத் தலத்தை அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரும் பாடியுள்ளனர். உமை அம்மையார் பசு வடிவுடன் இங்கு அடைந்து பூசித்த காரணத்தால் திருவாவடுதுறை என்ற பெயரை இப்பதி பெற்றது. முசுகுந்தன் வழிபட்டுப் பிள்ளைப்பெறு பெற்றனன். மணிமொழியாரும் குருதரிசனம் கண்ட பதி. சுந்தரருக்குத் திருவாரூர்த் தியாகர் வடிவினைக் காட்டிய திருப்பதி. திருஞான சம்பந்தர்க்கு இத்தலத்து இறைவர் பொன் காசு அடங்கிய உலவாக் கிழியை அருளிய தலமும் ஆகும். திருமூலர் இத்தலத்தில் இருந்துதான் திரு மந்திரங்களை அருளினர். இவர்தம் திருக் கோயிலும் இங்கு உண்டு. ஒன்பதாம் திருமுறை ஆசிரியர்களில் ஒருவரான திரு மாளிகைத் தேவர் பல சித்துக்கள் செய்ய எழுந்தருளி யுள்ள தலமும் இதுவே. படர் அரசமரம் உளது. தேவர்கள் இவ்வடிவில் இருக்க, இறைவர் இதன்கீழ் உள்ளனர். இங் குள்ள இரிடபம் தரும தேவதையாகும். அதனை இறைவர் ஊர்தியாகக் கொண்டதோடன்றி, அரசமர நிழலில் இருக் கவும் அருள் செய்த இடம். இங்குப் போதி அம்பலம் உண்டு. இங்குத் தேவர்கள் பொருட்டு ஆடியதாண்டவம் மகா தாண்டவம் எனப்படும். இங்குச் சித்தர்கள் வசிப்பதாகக் கூறுவர். இத்தலத்து இறைவர் மாசிலாமணி ஈசர், செம் பொன் தியாகர் என்றும், தேவியார் ஒப்பிலாமுலை அம்மை