பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

هستیم பாயிரம் }:5 என்றும், விநாயகர் அழகிய விநாயகர் என்றும் கூறப் பெறுவர். தீர்த்தம் கோமுத்தி தீர்த்தம். தலவிருட்சம் அரசு. இங்குச் சிவராசதானியாகிய பூரீ பஞ்சாட்சர தேசிகர் ஆதீனம் உளது. இங்கு இதுபோல் சிவஞானபீடம் ஏறி அருட் செங்கோல் நடத்துபவர்; இருபத்தோராவது குரு மகா சந்நிதானமாக வீற்றிருந்து அருட்கொடை வள்ளலாக விளங்குபவர் பூரீலபூ சுப்பிரமணிய தேசிக பரமாசாரிய சுவாமிகள் ஆவார். இவர்கள் இத் திருமடத்தில் ஆண்டு தோறும் பூர் நமசிவாய குருமூர்த்திகள் குருபூசை விழாவில் திரு மந்திர சொற்பொழிவுகளையும், திருமந்திர தொடர் புடைய நூல்களையும், ஏனேய அரிய பெரிய நூல்களையும் வெளியிட்டு இலவசமாக வழங்கி வருகின்றனர். இவர் தம் ஆட்சியில் சித்தாந்த சாத்திரங்கள் அவ்வளவும் வந்துள்ளன: வந்துகொண்டும் இருக்கின்றன. திருவெண்ணெய் நல்லூரில் ஆண்டுதோறும் பூரீமெய்கண்டார் மாநாட்டை நடத்துகின்றனர். தென்காசி, நாகர் கோவில் சுசீந்திரம் போன்ற இடங்களில் திருமுறை மாநாட்டை நடத்தி வருகின்றனர். புலவர் பெருமக்களுக்குப் பொருளை அவர்கள் உளம் களிக்கும் முறையில் வழங்கி வருகின்றனர். இன்னுேர் அன்ன சிறப்புடன் திருவாவடுதுறை விளங்குதலின், முக்காலங்கட்கு உரித்தான உயர்வு தோன்ற 'உயர் திருவாவடுதுறை' என வினேதொகை இலக்கணப்படி சிறப்பிக்கப்பட்டது. திரு பிள்ளே அவர்கள் இருந்து பல்வகைச் சிறப்புப் பெற்றுக் கல்வித் தொண்டை செய்தமையால், எங்கள் திருவாவடுதுறை என உரிமையோடு மொழிந்தனர். பூணு ல பூர சுப்பிரமணிய தேசிகபரமாசாரிய சுவாமிகள், திரு பிள்ளே அவர்கள் காலத்தில் 18வது குரு மகாசந்நிதானமாகத் திருவாவடுதுறையில் ஆதீன மூர்த்தி யாக விளங்கியவர். இவர் திருக்கழுக்குன்றத்தில் சைவ வேளாள மரபில் தோன்றியவர். இவர் தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகிய மும் மொழிகளிலும் நன்கு தேர்ச்சி பெற்றவர். இவரைத் திருக்கழுக்குன்றப் பண்டார சந்நிதி