பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார்

105

நெல்வேலியில் சரிந்தது. பாண்டியன் வெற்றிபெற்றான். இச்செய்தி நெடுமாறன் புராணத்திற் சேக்கிழார் குறித்துள்ளார். இது சம்பந்தமான வரலாற்று உண்மை யாதென இங்குக் காண்போம்.

பல்லவர்-சாளுக்கியர் போர் 1:சிறுத்தொண்டர் வாதாபியை வென்றபொழுது சாளுக்கியப் பேரரசனாக இருந்து அப்போரில் தோற்றவன் இரண்டாம் புலிகேசி என்பவன். அவன் மகன் முதலாம் விக்ரமாதித்தன் என்பவன். அவன் பல்லவனைப் பழிக்குப் பழி வாங்கச் சமயம் பார்த்திருந்தன். அவன் காலம் கி.பி. 654 - 680. அப்பொழுது பல்லவப் பேரரசனாக இருந்தவன் பரமேச்வரவர்மன் (கி.பி. 668-685). அதே காலத்திற் பாண்டிய நாட்டை ஆண்டவன் நெடுமாறன் (கி.பி. 640680). முதல் விக்கிரமாதித்ன் பல்லவ நாட்டின்மீது படையெடுத்துக் காஞ்சியைக் கைப்பற்றிக் கொண்டான். பரமேச்வரவர்மன் ஆந்திரநாட்டை நோக்கி ஓடிவிட்டான். தன்னை எதிர்ப்பவர் இல்லாததால், சாளுக்கியன் பல்லவப் பெருநாட்டின் தென் எல்லையான உறையூர் வரை சென்று அங்குத் தங்கி இருந்தான் அவன் அங்கிருந்த ஆண்டு கி.பி. 674 ஆகும்.

சாளுக்கியர் - பாண்டியர் போர்: பல்லவ நாட்டைக்கைப்பற்றி அதன் தென் எல்லையில் - பாண்டிய நாட்டின் வட எல்லையில் தங்கிய சாளுக்கியன், தெற்கே இருந்த பாண்டிய நாட்டையும் கைப்பற்ற எண்ணினான் போலும்! அவனது கடல் போன்ற படை பாண்டிய நாட்டைத்தாக்கியது. சிறந்த சிவபக்தனும் பெருவீரனுமான நெடுமாறன் தன் படைகளுடன் சாளுக்கியனை எதிர்த்தான். இருதிறத்தார்க்கும் கொடிய போர் நடந்தது. போர் நடந்த