பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

சேக்கிழார்

சேக்கிழார் வரலாற்று உணர்ச்சி. இக்காலத்தில் கல்வெட்டு, பட்டயம் இவற்றைக்கொண்டே அறியத்தக்க (மேற்சொன்ன) பல்லவர் - சாளுக்கியர் போர்கள், பாண்டியர் - சாளுக்கியர் போர் ஆகியவற்றின் விவரங் களைச் சேக்கிழார் எங்ங்னம் சேகரித்தார்? அவர் பாண்டியர் - சாளுக்கியர் போர் விவரங்களை ஆறு பாக்களில் அழகாக விளக்கியுள்ளார். முதல் விக்கிர மாதித்தனைப் பாண்டியனும் எதிர்த்தான் என்பதனைச் சாளுக்கியர் பட்டயமே ஒப்புக்கொள்ளுகிறது. இங்ஙனம் பட்டயச் செய்திக்கும் இலக்கியச் செய்திக்கும் மிகவும் பொருத்தமாக நெல்வேலிப் போரை விளக்கமாகப் படம் பிடித்துத் தந்த சேக்கிழாரது வரலாற்று உணர்ச்சியை நாம் என்னென்று பாராட்டுவது! நம்பியாண்டார் நம்பி போரின் முக்கியத்துவத்தை உணர்ந்தவராகத் தெரியவில்லை. சேக்கிழார் அதன் சிறப்பை நன்கு உணர்ந்து, நெடுமாறர் புராணத்துள் அப்போர் ஒன்றையே பற்றிப் பாடியிருத்தல், அவரது அரசியல் அறிவு நுட்பத்தையும் முதல் நூல் ஆசிரியர் கருத்தை அறியும் ஆற்றலையும் அங்கைக் கனிபோல் அழகுறக் காட்டுவதாகும்.

பூசலார் வரலாறு.'பூசலார் என்பவர் திருநின்றவூரினர் பிராமணர். இவர் சிவன்கோவில் கட்டிப் பொருள் தேட முயன்றார் பொருள் கிடைக்கவில்லை. உடனே மனத்தாற் கோவில் கட்ட முயன்று சில நாட்களிற் கட்டி முடித்தார். கும்பாபிஷேகத்திற்கு நாள் குறிப்பிட்டு விட்டார். அதே நாளில் தான் கட்டிய கயிலாசநாதர் கோவிலுக்குக் கும்பாபிஷேகம் நட்ததுவதாகப் பல்லவ வேந்தனான இராச சிங்கன் திர்மானித்தான். இறைவன் அரசன் கனவிற்சென்று பூசலார் விருப்பத்தைத் தெரிவித்து வேறொரு நாளைக் குறிக்குமாறு ஆணை இட்டான்.அரசன்