பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார் 127

என்று வரும் கலித்தொகைச் செய்யுட்களில் (16,39) வந்துள்ள கருத்தும் ஒன்றுபடல் ஓர்க

திருக்குறள். சேக்கிழார் உலகப் புகழ்பெற்ற திருக்குறட் பாக்களை அழுத்தந்திருத்தமாகப் படித்து உணர்ந்தவர் என்பதற்கு ஐம்பதுக்கு மேற்பட்ட சான்றுகள் காட்டலாம். அப்பரை நேரிற் கண்டு பழகாதிருந்தும் அப்பூதியடிகள் அவரிடம் பெருமதிப்புக் கொண்டு அவரையே நினைத்திருந்தார். அவரது திருப்பெயரையே தம் வீட்டில் இருந்த உயர்திணை - அஃறிணைப் பொருள்களுக்குப் பெயராக இட்டு வழங்கினார். அவரது திருநாமத்தையே ஜபித்துக்கொண்டிருந்தார். சேக்கிழார் இதனை விளக்கமாகக் கூறி. இறுதியில், 'காண்ட கமை இன்றியும், முன் கலந்தபெருங்

கேண்மையினார் " என்று (செ. 213) குறித்தார். இக் கருத்தை,

"புணர்ச்சி பழகுதல் வேண்டாம்உணர்ச்சிதான்

நட்பாங் கிழமை தரும் "என்று திருக்குறள் தன்னகத்தே பெற்றதன்றோ?

பட்டினப்பாலை (பத்துப்பாட்டு),சண்டீசர் வரலாற்றில் காவிரியின் சிறப்பை, 'பூந்தண் எந்நாளும் பொய்யா தளிக்கும் புனல் நாடு' என்று சேக்கிழார் செப்பியது.

"வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத்தலைய


கடற்காவிரி " எனவரும் பட்டினப்பாலை அடிகளை உளங்கொண்டு அன்றோ?