பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

. .

130 சேக்கிழார்

இறையனார் களவியல் உரை: சேக்கிழார் இறையனார் களவியலையும் அதன் உரையையும் அழுத்தகமாகப் படித்தவர் என்பதற்குப் பல சான்றுகள் காட்டலாம். சடங்கவி சிவாசாரியார் என்பவர் சுந்தரர் குலம் முதலியவற்றை ஆராய்ந்து "ஒத்த பண்பினால் அன்பு நேர்ந்தார்”என்று சேக்கிழார் குறித்துளர். இஃது,"இவனும் பதினாறாட்டைப் பிராயத்தனாய் இவளும் பன்னீராட்டைப் பிராயத்தளாய் ஒத்த பண்பும் ஒத்த நலனும் ஒத்த அன்பும் ஒத்த செல்வமும் ஒத்த கல்வியும் உடையராய்.” எனவரும் களவியல் உரையுடன் வைத்து ஒப்புநோக்கத் தக்கது.

சமயநரற் புலமை

சேக்கிழார் முதல் ஏழு திருமுறைகளையும படித்து

அநுபவித்தாற்போல வேறு எவருமே படித்திரார் என்பது, பெரிய புராணத்தைப் பழுதறப் படித்த அறிஞர் அறிவர். அவர், திருப்பதிகங்களைத் தம் பெரியபுராணத்துட் கையாண்டிருத்தலே இதற்குத் தக்க சான்றாகும். அவர் திருப்பதிகங்களைக் கையாண்ட சில முறைகளை இங்குக் காண்போம்.

1. சேக்கிழார் பல இடங்களில் பதிக முதற் குறிப்பைக் கூறி.'என்று தொடங்கும் திருப்பதிகம் பாடினார் என்று சொல்லிச் செல்வார்.

'பித்தாபிறை சூடி எனப் பெரிதாந் திருப்பதிகம்

இத்தாரணி முதலாம் உலகெல்லாம் உய எடுத்தார்.


2. சில இடங்களில் பதிகத்தின் முதலும் ஈறும் குறிக்கப்படும்

"ஈன்றாளு மாய் எனக் கெந்தையுமாகி"எனவெடுத்துத்