பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார்13

புலியூர்க் கோட்டம்: இப்பகுதிக்குத் தலைநகரம் புலியூர் என்பது. அது, சென்னைக்கடுத்த கோடம்பாக்கம் புகைவண்டி நிலையத்திலிருந்து அரைக்கல் தொலைவில் உள்ள சிற்றூர். அதனைச் சுற்றியுள்ள கோவூர், பூவிருந்த வல்லி, குன்றத்தூர் முதலிய ஊர்களைக் கொண்ட நிலப் பகுதி ‘புலியூர்க் கோட்டம்’ எனப்பட்டது.

குன்றத்தூர்: இது சென்னைக்கடுத்த பல்லாவரம் (பல்லவபுரமி) புகைவண்டி நிலையத்திலிருந்து நான்கு கல் தொலைவில் உள்ள சிற்றூர் ஆகும். இதற்குச் சென்னையிலிருந்து நேரே பேருந்து போகின்றது. இவ்வூர், சோழர் காலத்தில் சிறப்பாகச் சேக்கிழார் காலத்தில் சிறந்த நிலையில் இருந்திருத்தல் வேண்டும் என்பதை, அதன் பழுதுபட்ட தோற்றம் கொண்டு கூறக்கூடும். இன்றைய குன்றத்தூர்- ‘திருநாகேச்சரம், நத்தம்’ என்னும் இரண்டு சிற்றூர்களாக இருக்கின்றது. இரண்டையும் ஏறத்தாழ அரைக்கல் நீளமுள்ள பழுதுபட்ட பாதை ஒன்றுபடுத்துகிறது. அப்பாதையின் இரண்டு பக்கங்களிலும் அங்கங்கே இரண்டொரு தெருக்களும் வீடுகளும் பசிய வயல்களும் காண்கின்றன. நத்தம் எனப்படும் சிற்றூரிற்றான் சேக்கிழார் கோவில் இருக்கின்றது. அக்கோவில் உள்ள இடத்திற்றான் சேக்கிழார் வாழ்ந்த இல்லம் இருந்தது என்று அங்குள்ள அவர் மரபினர் கூறி வருகின்றனர். நத்தம் பழமையான இடம் என்பதில் ஐயமில்லை சில இடங்களில் நீண்ட மதிற்சுவரின் பழுதுபட்ட பகுதிகள் காண்கின்றன. அங்குள்ள சைவ-வைணவக் கோவில்கள் பழுதுபட்டுவிட்டன. சில பகுதிகள் அழிந்து, கிடக்கின்றன; கல்வெட்டுகள் சிதைந்து காண்கின்றன. நத்தத்தில் உள்ள பெருமாள் கோவிலில் எழந்தருளியுள்ள திருமாலின் பெயர் திருவூரகப் பெருமாள் என்பது, அதற்கு அண்மையில் உள்ள சிவன் கோவில்